லண்டனில் இந்திய எதிர்ப்பு பேரணி நடத்த திட்டம்!

ஞாயிறு அக்டோபர் 20, 2019

காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து தீபாவளி அன்று இந்திய தூதரம் அருகில் இந்திய எதிர்ப்பு பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதற்கு லண்டன்மேயர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஒருபக்கம் ஆதரவு இருந்து வந்தாலும் ஒருபுறம் எதிர்ப்பு இருந்து வருகிறது. அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள்.

லண்டனில் உள்ள இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தின் முன் கூடி சந்தோசத்தை வெளிப்படுத்துவார்கள். அதேநாளில் இந்தி எதிர்ப்பு பேரணி நடத்த இருக்கிறோம். இதில் ஐந்தாயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என இந்திய வம்சாவளி லண்டன் சட்டமன்ற உறுப்பினர் நவின் ஷா மேயருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு மேயர் ‘‘பண்டிகை நாளான தீபாவளி அன்று லண்டன் தூதரகத்திற்கு முன் இந்திய எதிர்ப்பு (Anti-India) பேரணி நடத்த திட்டமிட்டிருப்பது மிகவம் கண்டினத்திற்குரியது. லண்டன் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தேவையிருக்கும் நிலையில், இந்த பேரணி மிகப்பெரிய பிளவு போக்கை ஏற்படுத்தும். இதை ஏற்பாடு செய்தவர்கள் யோசித்து அவர்களுடைய திட்டத்தை ரத்து செய்யக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என பதில் அளித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி இந்திய சுதந்திரத்தின்போது லண்டனில் வாழும் பாகிஸ்தானியர்கள் மற்றும் பிரிவினைவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோசம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.