கொரோனாவின் தாக்கத்தினால் கூகுள் நிறுவனம் செலவினை குறைக்க திட்டம்

சனி ஏப்ரல் 25, 2020

உலகமே கொரோனாவால் ஸ்தம்பித்து போயுள்ள நிலையில், சிறு நிறுவனங்கள் முதல் பெரிய பெரிய கார்ப்பரேட் வரை பொருளாதார ரீதியாக பெரிதும் பின்னடைவை சந்தித்துள்ளன.

இதன் காரணமாக ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களால் முடிந்தவரை செலவினை குறைக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதிலும் சேவையை துறையை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிரடியாக பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதை காண முடிகிறது.

இந்த நிலையில் தகவல் தொழில்நுட்ப துறையினை சேர்ந்த ஜாம்பவான்கள் கூட, தங்களால் முடிந்த வரை தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்தினை குறைத்து வருகின்றனர்.

இதற்கு IT ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனமும் விதிவிலக்க என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. கூகுள் நிறுவனம் நடப்பு ஆண்டின் இரண்டாம் பாதியில் மார்கெட்டிங் செலவினை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.