கோப் குழு அறிக்கை -இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

புதன் அக்டோபர் 23, 2019

23 நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகள் அடங்கிய கோப் (Cope) குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று (23) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

2018ஆம் ஆண்டுக்கு அமைய இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கோப் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை 23 நிறுவனங்கள் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்த அறிக்கையில் உள்ளடங்குவதாக அவர் கூறியுள்ளார்.