சுனாமி வீடுகளை வழங்குக!

புதன் அக்டோபர் 23, 2019

அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை ஒப்படைக்குமாறு, பயனாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட் நீத்தை, நுரைச்சோலை கிராமத்தில், சவூதி அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் ஒவ்வொரு வீடும் சுமார் 20 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

5.5 பில்லியன ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டத்தில் 500 வீடுகள், பாடசாலைகள், பள்ளிவாசல், வைத்தியசாலை, நூலகம், பொதுச் சந்தை, கலாசார மண்டபம் ஆகியன உள்ளடங்கியுள்ளன.

2007ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த வீடமைப்புத் திட்டம், இன்று வரை உரிய பயனாளிகளுக்குக் கையளிக்கப்படாமல் பாழடைந்தும், சேதமடைந்தும் காணப்படுகின்றது.

பயனாளிகளை தெரிவு செய்வதற்கு பிரதேச செயலகங்களில் பல காணிக் கச்சேரி வைத்தும் இவ்வீடுகளை வழங்குவதற்கான எந்த விதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கவில்லையென, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.