அமெரிக்க நீதிமன்ற முடிவை எதிர்த்து லசந்தவின் மகள் மேன்முறையீடு செய்ய தீர்மானம்!

செவ்வாய் அக்டோபர் 22, 2019

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த அமெரிக்க நீதிமன்ற முடிவை எதிர்த்து லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க மேன்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளார்.

தனது தந்தை மறைவுக்கு படுகொலைக்கு அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அது தொடர்பில் தனக்கு நட்ட ஈடு பெற்றுத் தருமாரு கோரியும் கடந்த யூலை மாதம் 15 ஆம் திகதி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கை தள்ளுபடி செய்வதாக இன்று (செவ்வாய்க்கிழமை) கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இது எனது தந்தையின் சார்பாக நீதிக்கான எனது குடும்பத்தின் நீண்டகால போராட்டத்தில் ஏமாற்றமளிக்கும் பின்னடைவாகும்.

இந்த முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் நீதியிலிருந்து தப்பிக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த நான் தொடர்ந்து போராடுவேன்” என கூறியுள்ளார்.