4 மாதத்திற்குள் சிறீலங்காவிற்கு GSP+ சலுகையை மீளளிப்பதற்கு ஐரோப்பிய ஆணையம் திட்டம்

January 11, 2017

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் 2010ஆம் ஆண்டு சிறீலங்காவிடம் இருந்து மீளப்பெறப்பட்ட GSP+ சலுகையை மீளளிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் (European Commission) திட்டமிட்டுள்ளது.

இதற்கு இன்னும் நான்கு மாதங்களுக்குள் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றமும் (EU Parliament), ஐரோப்பிய ஒன்றியப் பேரவையும் (European Council) ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் GSP+ சலுகை சிறீலங்காவிற்கு மீளளிக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் தெரிவித்துள்ளது.

GSP+ சலுகை சிறீலங்காவிற்குக் கிடைப்பதைத் தடுப்பதற்கு எவ்விதமான காத்திரமான நடவடிக்கைகளையும் இதுவரை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் எடுக்காத நிலையில், தற்பொழுது ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் வழங்கியுள்ள நான்கு மாத கால அவகாசத்தைப் பயன்படுத்திக் காத்திரமான நடவடிக்கைகள் எவற்றிலும் இனியாவது தமிழ் அமைப்புக்கள் ஈடுபடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆதாரம்: Tamilpolity  European Commission 

செய்திகள்
வெள்ளி செப்டம்பர் 22, 2017

ஈழமுரசு, சங்கதி-24, tamilpolity ஆகிய ஊடகங்களின் தாய் அமையமாகத் திகழும் ஊடக மையத்தின் அடுத்த பாய்ச்சலாக விரைவில் பிரான்சைத் தளமாகக் கொண்டு தமிழ்த் தேசியத் தொலைக்காட்சி உதயமாக உள்ளது.

செவ்வாய் செப்டம்பர் 19, 2017

பிரான்சில் கேணல் பரிதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டி! 

திங்கள் செப்டம்பர் 18, 2017

வவுனியா ஜோசப் முகாமில் இளைஞர், யுவதிகளின் அவலக் குரல்களுக்கு மத்தியில் நடந்து சென்றேன்...

செவ்வாய் செப்டம்பர் 12, 2017

தமிழினப்படுகொலைக்கு நீதிவேண்டி 6ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட