பிரதமர், சோனியா மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்! விஜயராஜ் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கதறல்


செப் 19, 2012
 
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா மீது விஜயராஜாவின் தற்கொலைக்கு காரணம் என வழக்கு பதிவு செய்தால்தான், விஜயராஜாவின் உடலை வாங்கிக் கொள்வோம் என்று, அவரது உறவினர்களும், பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு எதிரே சுமார் 10க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த சேலம் தாசில்தார் சுரேஷையும், பேசவிடாமல் திருப்பி அனுப்பி விட்டார்கள்.

அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் அவரது உடலை வாங்க மறுத்துள்ளனர்.

எப்.ஐ.ஆர் பதிவு பிரதியை  பார்க்க அனுமதிக்க வேண்டும், கைப்பற்றப்பட்ட 36 பக்க கடிதத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும்,

அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி, ராஜபக்ச ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும். அப்படி செய்தால்தான் நாங்கள் உடலை வாங்குவோம்’’ என்று பிடிவாதமாக இருப்பதோடு அல்லாமல், உடலை பிரேத பரிசோதனை  செய்வதற்கும் அனுமதி அளிக்காமல் உள்ளனர்.

விஜயராஜ் உறவினர்களோடு, அனைத்திந்திய பெருமன்றம், விடியல் பெண்கள் மையம், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மருத்துவர்கள் மற்றும் பொலிஸார் சமாதானம் பேசிவருகின்றனர்.

தீக்குளித்து உயிரிழந்த விஜயராஜின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்தால்தான் அவரது உடலை அங்கிருந்து எடுக்கவே நாங்கள் அனுமதிப்போம் என்று பல்வேறு கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

எதிர்வரும் நிகழ்வுகள்

Coming up event
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
கரும்புலிகள் நாள் 2013
Coming up event
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013
Coming up event
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013
Coming up event
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013
Coming up event
தமிழீழம் பற்றிப் பேசுவோம்
Coming up event
தாம் தீம் தகதிமிதா
Coming up event
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013
Coming up event
தேசத்தின் மயில்கள்
Coming up event
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
Coming up event
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
இளவேனில் - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி
Coming up event
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள்

இன்றைய படம்