
மன்னார் அரச பேரூந்து வளாகத்தில் அமைந்திருக்கும் தனியாருக்கு சொந்தமான கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை திருட்டுச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக அதன் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
மன்னார் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நகரின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் அரச பேரூந்து நிலைய வளாகத்தினுள் தனியாருக்குச் சொந்தமான கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில் இடம்பெற்றிருக்கும் கொள்ளைச்சம்பவத்தின் சூத்திரதாரிகள் யார் என்பது இதுவரையில் தெரியவில்லை.
மன்னார் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது இடம்பெற்று வரும் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் அரச பேரூந்து வளாகத்தில் தற்போது இடம்பெற்றிருக்கம் மேற்படி கொள்ளைச் சம்பவத்தினால் மன்னார் நகர வர்த்தகர்கள் பெரிதும் அச்சமான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருப்பதாக தெரிகின்றது.