பொங்கி எழுகின்றனர் தமிழர்கள் - சிங்கள தேசமே நீ சிந்தித்துச் செயற்படு
|
செப் 18, 2012
|
பொங்கு தமிழர்களாய் பொங்கி எழுந்து எங்கும்
புதுமைகளைப் படைத்திடுவோம்
பொறுத்திருந்து பாருங்கள்
சிங்கள தேசமே....... மகிந்த அரசே.....
பொங்கும் தமிழர்களைப் பொறுத்திருந்து பாருங்கள்
யாருக்கும் பணியாத மங்காப் புகழுடன்
வாழ்ந்த தமிழீழ மண்ணையும் மக்களையும்
அடக்கி ஆள நினைத்தாய் அழித்தொழித்தாய்
நெருப்பில் குழித்தவர்கள் தமிழர் நாம்
நீசர்களே உங்களுக்கு அடங்கமாட்டோம் அடிபணியோம்
பீனிக்ஸ் பறவைகளாய் மீண்டும் பிறப்பெடுப்போம்.
உலகிற்கு சமாதானம் போதிக்க உருப்பெற்ற ஐ.நா சபையே
எங்களை எதற்காக எட்டிப்பார்க்க மறுக்கிறாய்???????
குண்டு விழுந்து எங்கள் தேசம்
குலுங்கி அழுத போதிலும்
துண்டு துண்டங்களாக எங்கள்
தசைகள் பிய்ந்த போதிலும்
கொத்துக் கொத்தாக நாங்கள்
கொன்றொழிக்கப்பட்ட போதிலும்
எதற்காக எம்மை நீங்கள்
திரும்பியே பார்க்கவில்லை...........?????
சிங்களத்திற்கு நீங்கள் சிநேகிதர்கள் என்பதாலா.......???
ஐ.நாவே எங்களையும் அவசரமாய்த் திரும்பிப் பார்.
தமிழரின் தேசிய விடுதலைப் போரை
பயங்கரவாதமாகச் சித்தரித்தவர்களே
புலிகளைப் பூண்டோடு அழிக்க முயன்றீர்கள்
புலிகள் பயங்கரவாதிகளல்ல
புலிகளே தமிழரின் காவல் தெய்வங்கள்
புலிகளின் போர் புனிதமானது
போராட்ட விதிகளைப் பின்பற்றி நடந்தது
புலிகள் பயங்கரவாதிகள் அல்ல.
பொல்லாத சிங்களப் படைகளின்
செல்லாத செயல்களால் எங்கள்
தேசத்தை நாம் இழந்தோம்.
சிவந்தது தமிழீழம் சிந்தித்தனர் தமிழர்கள்
பொங்கு தமிழர்களாய்ப் புறப்பட்டு விட்டனர்
ஐ.நாவின் முற்றத்தில் ஆர்ப்பரிக்கவுள்ளனர்
சிங்கள தேசமே... சிந்தித்துச் செயற்படு.
தமிழர் தாயகத்திலுள்ள உன்
படைகளை வெளியேற்று.
சந்திக்கு சந்தி வந்து
பொந்துகள் அமைத்து நின்று
குந்தி இருந்துகொண்டு
குசலம் விசாரிக்கிறாய்
வருத்தமென்றால் மருந்து தர
நீ என்ன வைத்தியனா..........????
முத்தாக நாம் போற்றும் மங்கையரைக் கவர்ந்திழுத்து
முந்தானை திறந்து முகர்வதற்கு முயல்கிறாய்.
எம் தமிழ்ப் பெண்களிடம்
எதிர்நிற்க முடியாமல்
களத்தில் மண்டியிட்ட சிங்களச் சேனையே
சீண்ட நினைக்காதே எம் தமிழ்ப் பெண்களை
பூண்டோடு அழிவாய் பொறுத்திருந்து பார் நீ...
பொங்கு தமிழ் எங்கள் புனிதத் தமிழ் எங்கும் பாயும் ஏற்றமிகு தமிழ்
அலை அலையாய் நாம் ஐ.நாவில் அணி திரள்வோம்
ஆறாத் துயருடன் மீளாத் துயில் கொள்ளும்
வீர மறவர்களை மனதில் இருத்தி நாம்
பொங்கு தமிழர்களாய் பொங்கி எழுவோம்
எங்கள் உரிமைகளை இனியும் மறுக்காதீர்
எங்கள் தமிழினத்தை இழிவாய்க் கருதாதீர்
ஏற்றமுடன் வாழ்ந்த வாழ்வை
இனியும் பெறும் வரைக்கும்
தமிழர் நாம் ஓயமாட்டோம்
பொங்கி எழுவோம்.
ஐ.நாவின் முற்றத்தில் அணி திரள்வோம்.
அலை அலையாய் நாம் அணி திரள்வோம்
அனைத்து உறவுகளும் அணி திரள்வோம்
தமிழீழத் தாயகத்தை ஐ.நா அங்கீகரிக்க
அனைத்து தமிழர்களும் அணி திரண்டு ஆர்ப்பரிப்போம்
அணி திரள்வோம் ஐ.நாவில் அணி திரள்வோம்
தயாராகுங்கள் தமிழர்களே....... தயாராகுங்கள் உறவுகளே.....
தாயகத்தைப் பாதுகாக்கத் தயாராகுங்கள்
தமிழீழத்தைப் பெற்றெடுக்க தயாராகுங்கள்
மக்கள் புரட்சி ஐ.நாவில் வெடிக்கட்டும்
சுதந்திர தமிழீழம் தாயகத்தில் மலரட்டும்.
பொங்கு தமிழில் உங்களுடன் இணைய
தாயகத்திலிருந்து வீரமணி
- சங்கதி24.கொம்
புதுமைகளைப் படைத்திடுவோம்
பொறுத்திருந்து பாருங்கள்
சிங்கள தேசமே....... மகிந்த அரசே.....
பொங்கும் தமிழர்களைப் பொறுத்திருந்து பாருங்கள்
யாருக்கும் பணியாத மங்காப் புகழுடன்
வாழ்ந்த தமிழீழ மண்ணையும் மக்களையும்
அடக்கி ஆள நினைத்தாய் அழித்தொழித்தாய்
நெருப்பில் குழித்தவர்கள் தமிழர் நாம்
நீசர்களே உங்களுக்கு அடங்கமாட்டோம் அடிபணியோம்
பீனிக்ஸ் பறவைகளாய் மீண்டும் பிறப்பெடுப்போம்.
உலகிற்கு சமாதானம் போதிக்க உருப்பெற்ற ஐ.நா சபையே
எங்களை எதற்காக எட்டிப்பார்க்க மறுக்கிறாய்???????
குண்டு விழுந்து எங்கள் தேசம்
குலுங்கி அழுத போதிலும்
துண்டு துண்டங்களாக எங்கள்
தசைகள் பிய்ந்த போதிலும்
கொத்துக் கொத்தாக நாங்கள்
கொன்றொழிக்கப்பட்ட போதிலும்
எதற்காக எம்மை நீங்கள்
திரும்பியே பார்க்கவில்லை...........?????
சிங்களத்திற்கு நீங்கள் சிநேகிதர்கள் என்பதாலா.......???
ஐ.நாவே எங்களையும் அவசரமாய்த் திரும்பிப் பார்.
தமிழரின் தேசிய விடுதலைப் போரை
பயங்கரவாதமாகச் சித்தரித்தவர்களே
புலிகளைப் பூண்டோடு அழிக்க முயன்றீர்கள்
புலிகள் பயங்கரவாதிகளல்ல
புலிகளே தமிழரின் காவல் தெய்வங்கள்
புலிகளின் போர் புனிதமானது
போராட்ட விதிகளைப் பின்பற்றி நடந்தது
புலிகள் பயங்கரவாதிகள் அல்ல.
பொல்லாத சிங்களப் படைகளின்
செல்லாத செயல்களால் எங்கள்
தேசத்தை நாம் இழந்தோம்.
சிவந்தது தமிழீழம் சிந்தித்தனர் தமிழர்கள்
பொங்கு தமிழர்களாய்ப் புறப்பட்டு விட்டனர்
ஐ.நாவின் முற்றத்தில் ஆர்ப்பரிக்கவுள்ளனர்
சிங்கள தேசமே... சிந்தித்துச் செயற்படு.
தமிழர் தாயகத்திலுள்ள உன்
படைகளை வெளியேற்று.
சந்திக்கு சந்தி வந்து
பொந்துகள் அமைத்து நின்று
குந்தி இருந்துகொண்டு
குசலம் விசாரிக்கிறாய்
வருத்தமென்றால் மருந்து தர
நீ என்ன வைத்தியனா..........????
முத்தாக நாம் போற்றும் மங்கையரைக் கவர்ந்திழுத்து
முந்தானை திறந்து முகர்வதற்கு முயல்கிறாய்.
எம் தமிழ்ப் பெண்களிடம்
எதிர்நிற்க முடியாமல்
களத்தில் மண்டியிட்ட சிங்களச் சேனையே
சீண்ட நினைக்காதே எம் தமிழ்ப் பெண்களை
பூண்டோடு அழிவாய் பொறுத்திருந்து பார் நீ...
பொங்கு தமிழ் எங்கள் புனிதத் தமிழ் எங்கும் பாயும் ஏற்றமிகு தமிழ்
அலை அலையாய் நாம் ஐ.நாவில் அணி திரள்வோம்
ஆறாத் துயருடன் மீளாத் துயில் கொள்ளும்
வீர மறவர்களை மனதில் இருத்தி நாம்
பொங்கு தமிழர்களாய் பொங்கி எழுவோம்
எங்கள் உரிமைகளை இனியும் மறுக்காதீர்
எங்கள் தமிழினத்தை இழிவாய்க் கருதாதீர்
ஏற்றமுடன் வாழ்ந்த வாழ்வை
இனியும் பெறும் வரைக்கும்
தமிழர் நாம் ஓயமாட்டோம்
பொங்கி எழுவோம்.
ஐ.நாவின் முற்றத்தில் அணி திரள்வோம்.
அலை அலையாய் நாம் அணி திரள்வோம்
அனைத்து உறவுகளும் அணி திரள்வோம்
தமிழீழத் தாயகத்தை ஐ.நா அங்கீகரிக்க
அனைத்து தமிழர்களும் அணி திரண்டு ஆர்ப்பரிப்போம்
அணி திரள்வோம் ஐ.நாவில் அணி திரள்வோம்
தயாராகுங்கள் தமிழர்களே....... தயாராகுங்கள் உறவுகளே.....
தாயகத்தைப் பாதுகாக்கத் தயாராகுங்கள்
தமிழீழத்தைப் பெற்றெடுக்க தயாராகுங்கள்
மக்கள் புரட்சி ஐ.நாவில் வெடிக்கட்டும்
சுதந்திர தமிழீழம் தாயகத்தில் மலரட்டும்.
பொங்கு தமிழில் உங்களுடன் இணைய
தாயகத்திலிருந்து வீரமணி
- சங்கதி24.கொம்

எதிர்வரும் நிகழ்வுகள்
இளவேனில் - யேர்மனி |
நாலாம் ஆண்டு, நடுகல் வணக்க நிகழ்வு - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2013 - பூப்பந்தாட்டப் போட்டிகள் |
சங்கொலி - தாயக விடுதலைப்பாடற் போட்டி |
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள் |























