மகிந்த மன்மோகன்சிங்கை ஈரானில் சந்திக்கவுள்ளார்?


ஆக 18, 2012
 

 

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை மகிந்த ராஜபக்ச ஈரானில் அடுத்த வாரம் சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தமாதம் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பு மகிந்த ராஜபக்சவுக்கு கிடைக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வரும் 26ம் நாள் அணிசேரா நாடுகளின் மாநாடு ஆரம்பமாகவுள்ளது.
இந்த மாநாட்டில் மகிந்த ராஜபக்சவும் பங்கேற்கிறார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் இதில் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த மாநாட்டின் போது இவர்கள் இருவரும் தனியாகச் சந்தித்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
எனினும் இந்தச் சந்திப்பு நடக்குமா என்பதை உறுதிபடகூற மறுத்துள்ளன.இந்தியத் தரப்பிலும் இதுகுறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.