வடக்கில் போதைப்பொருள் கடத்தலின் முதன்மைபுள்ளி கிளிநொச்சி ஆசிரியர் கைது!


ஆக 8, 2012
 


வடமாகனத்தில் போதைப் பொருள் விற்பனையின் முக்கிய நபராக கிளிநொச்சியைச் சேர்ந்த ஆசிரியர்ஒருவர் இரகசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.இணுவிலைச் சேர்;ந்த குறித்த நபர் கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி
வருகின்றார். இவர் அடிக்கடி கொழும்பு சென்று வருவது தெரியவந்துள்ளது. அவ்வாறு கொழும்பு சென்றுவரும் போதே இவர் இரகரியப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் வீட்டில் நடத்திய தீடீர் சோதனை நடவடிக்கையில் கஞ்சா, கேரோயின் போன்ற போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபருடைய கல்லூரித் தொடர்பு இடைக்காலமாக நிறுத்தி வைக்கும் படி காவல்துறையினர் பாடசாலை நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளனர்.
இவருடன் இணைந்து குறித்த போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் பலர் மேலும் கைது செய்யப்படவுள்ளனர் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.