பதினாறாவது நாளாகத் தொடரும் சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம்!


ஆக 6, 2012
 

நேற்று பதினைந்தாவது நாளாகத் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்துள்ள திரு. சிவந்தன் கோபி ஒலிம்பிக் போட்டிகளின் முடிவுநாளாகிய இம்மாதம் பன்னிரண்டாம் நாள்வரை உறுதியாக தமது போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.

தன்னை சந்தித்து வரும் பல இளையவர்கள் தனது போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குவதுடன் புலம்பெயர்நாடுகளில் இது போன்ற கவனயீர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் பற்றி தன்னுடன் கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்ட அவர் மின்னஞ்சல் மூலமாக ஆதரவினை வழங்கி வரும் தமிழக உறவுகளுக்கும் உலகத்தமிழ் உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்தார்.

திரு. சிவந்தன் பெரும்பாலான நேரத்தில் படுக்கையில் சோர்வாகக் காணப்படுகிறார். இது தொடர்பாக அவரை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர் இந்து குமரேந்திரனினடம் விசாரித்தபோது அவரது இரத்தத்தில் குளுக்கோசின் அளவு மிகவும் குறைந்து காணப்படுவதாகவும் அது தவிர அவரது உடல்நிலை
சுமூகமாகவுள்ளதாக கருத்துவெளியிட்டார்.

கடந்த பதினான்கு நாட்களும் கடைப்பிடிததுபோல் இன்றைய தினமும் காலை 9மணிக்கு தமிழீழத் தேசியக்கொடியும் பிரித்தானியக் கொடியும் ஏற்றப்பட்டு இரவு 8 மணிக்கு அவை இறக்கப்பட்டன. ஓலிம்பிக் போட்டிகளுக்காக லண்டன் போக்குவரத்து மிகச்சீரானதாக அமைந்துள்ளதால் மக்கள் பொதுப்போக்குவரத்தினை பாவித்து திரு. சிவந்தன் தங்கியிருக்கும் ஸ்ரற்போர்ட் பிரதான வீதியில் உள்ள இலகு தொடருந்து நிலையத்துக்கு (Stratford High Street DLR) வரமுடியும்.

 


 

எதிர்வரும் நிகழ்வுகள்

Coming up event
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
கரும்புலிகள் நாள் 2013
Coming up event
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013
Coming up event
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013
Coming up event
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013
Coming up event
தமிழீழம் பற்றிப் பேசுவோம்
Coming up event
தாம் தீம் தகதிமிதா
Coming up event
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013
Coming up event
தேசத்தின் மயில்கள்
Coming up event
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
Coming up event
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
இளவேனில் - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி
Coming up event
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள்

இன்றைய படம்