மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவமும் மறைக்கப்பட்ட உண்மைகளும்-திவ்வியா.


ஆக 4, 2012
 

 

மன்னார் மாவட்டத்தில் தமிழ் முஸ்ஸிம் மக்கள் எவ்வித பிரிவினைகளுமற்ற நிலையில் ஒற்றுமையாக வாழ்ந்த நிலையில் 1990 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள முஸ்ஸிம் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து சென்றனர்.

மீண்டும் அந்த முஸ்ஸிம் மக்கள் தமது சொந்த இடங்களில் முpள் குடியேறிய போது அந்த மக்களின் மனதில் தமிழ் மக்கள் மீது ஒரு வெறுப்பு நிலை ஏற்பட்டிருந்தது.எனினும் காலங்கள் கடந்து செல்ல அந்த மக்கள் தமது வெளியேற்றத்தை மனதுக்குள் பதுக்கி வைத்த நிலையில் வாந்து வந்தனர்.
இந்த நிலையில் அன்று முதல் இன்று வரை மன்னார் மாவட்டத்தில் தமிழ் முஸ்ஸிம் மக்கள் ஒற்றுமையுடனும் நட்புடனும் வாழ்ந்து வந்தனர்.
தமிழ் முஸ்ஸிம் மக்களின் ஒன்றுமையை பறைசாற்றக்கூடியதாக மன்னார் மாவட்டம் திகழ்ந்து வந்தது.
இந்த நிலையில் இரண்டு மீனவ சமூகங்களுக்கிடையில் ஏற்பட்ட பிணக்கு இன்று மன்னார் மாவட்டத்தை மட்டுமல்ல நாட்டையே தலைகீழக்கியுள்ளது.
மன்னார் கோந்தைப்பிட்டி மீன் பிடி இறங்கு துறைமுகத்தை மன்னார் யோசப்வாஸ் நகரைச் சேர்ந்த மீனவர்களா அல்லது மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த மீனவர்களா ஆழ்வது என்ற கருத்து முறன்பாடே இன்று மன்னார் தீதிமன்றம் மீதான தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து மனனாரில் ஏற்பட்டுள்ள அச்ச சூழ்நிலைக்கான முக்கிய காரணமாக உள்ளது.
ஆனால் இன்று குறித்த சம்பவம் பல கோணங்களில் திசை மாற்றப்பட்டுள்ளது.கடந்த 18 ஆம் திகதி(18-07-2012) புதன் கிழமை காலை 9 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள மன்னார் சதோசா விற்பனை நிலையத்திற்கு முன் ஒன்று திரண்ட உப்புக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்காண முஸ்ஸிம் மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துவதற்கான ஆரம்ப பணியில் ஈடுபட்டனர்.
அந்த மக்களின் எதிர்பார்ப்பு கோந்தைப்பிட்டி மீன்பிடி இறங்கு துறை முகம் உப்புக்குளம் கிராம மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதேயாகும்.

அவர்களுடைய எதிர்பார்ப்பில் எவ்வித பிழையும் இல்லை.
குறித்த ஆர்ப்பாட்டம் மன்னார் நீமன்றம் வரை சென்றது.இதனால் பாதைகள் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது.ஆனால் பொலிஸார் அந்த மக்களை அகற்றவோ அல்லது போக்குவரத்துக்களை தடையின்றி நடாத்தவே முயற்சிக்கவில்லை.

மாறாக அவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்களாகவே அன்றைய தினம் காணப்பட்டனர்.ஆர்ப்பாட்டக்காரர்களின் எதிர்ப்பு அதிகரிக்க நீதிமன்றத்தினுள் இருந்த மன்னார் நீதவான் ஏ.யூட்சன் வெளியில் வந்தார்.
இதன் போது அங்கு இடம் பெற்ற சம்பவங்களை நேரில் கண்ட நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை அவ்விடத்தில் இருந்து உடன் அகற்றுமாறு பாதுகாப்புத்தரப்பினருக்கு நேரடியாக உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் பாதுகாப்புத்தரப்பினர் அந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முற்பட்ட போது அங்கு பாரிய யுத்தம் ஒன்று இடம் பெற்று முடிந்தது.குறித்த சம்பவத்தின் போது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக்குண்டு தாக்குதல் தடியடி போன்றவற்றை மேற்கொண்டனர்.

-இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் மன்னார் நீதிமன்றம் மீது கற்களால் வீசி தாக்குதல்களை மேற்கொண்டனர்.இதன் போது அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பு பிரிவு என தன்னை அடையாளப்படுத்திய மன்னாரைச் சேர்ந்த காவல்துறை காண்ஸ்டப்பில் ஒருவர் தலையில் கெல்மட் ஒன்றை அணிந்தவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரை நீதிமன்றத்தின் பின் புறமாகஉள்ளே அழைத்துச் சென்றுள்ளார்.

-இதன் போதும் மன்னார் நீதிமன்றத்தின் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.இதன் போது நீதிமன்றத்திற்கு சேதம் ஏற்பட்டதோடு அங்கு இருந்த நீதிபதிகள் அதிஸ்டவசமாக எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளனர்.-குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் சம்பவ தினமன்று 13 பேர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.ஆனால் குறித்த 13 பேரில் குற்றவாளிகளும் சுற்றவாளிகளும் காணப்படுகின்றனர்.குறித்த சம்பவம் தொடர்பில் அடையாளம் காணப்பட்ட 35 பேருடைய விபரங்களை சட்டத்தரணிகள் பாதகாப்புத்தரப்பினரிடம் வழங்கினர்.இந்த நிலையில் மன்னார் வவுனியா காவல்துறையினர் இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரனைகளை நடத்திய நிலையில் கொழும் குற்றத்தடுப்பு பிரிவு(4 ஆம் மாடியில்) இருந்து விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் ஜனாதிபதியின் உத்தரவிற்கமைவாக விசாரனைகளை மேற்கொள்ள மன்னார் வந்தனர்.

ஆனால் இவர்கள் முதலில் மன்னார் நீதவானிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டனர்.அதனைத் தொடர்ந்து 6 சட்டத்தரணிகளிடம் வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டனர்.இறுதியாக மன்னாரைச் சேர்ந்த 3 ஊடகவியலாளர்களிடம் பல மணி நேரம் விசாரனைகளை மேற்கொண்டதோடு அவர்கள் வைத்திருந்த ஆவணங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் 35 பேரை இவர்கள் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி மன்னார் மண்ணின் நிலமையை மீண்டும் வழமைக்குத்திருப்புவார்கள் என்ற எண்ணம் சட்ட வாளர்களுக்கும் நீதித்துறைக்கும் மக்களுக்கும் காணப்பட்டது.
ஆனால் நினைத்தது ஒன்று.ஆனால் தற்போது நடக்கின்றது ஒன்று.35 பேரூடைய விபரங்கள் சட்டத்தரணிகளுடாக சந்தேக நபர்கள் என வழங்கப்பட்ட போதும் அதில் பல குளறு படிகள் இடம் பெற்றுள்ளது. 35 பேரில் 26 டீபருடைய பெயர் விபரங்கள்மட்டுமே தற்போது காவல்துறையினரிடம் உள்ளது.ஏனைய 9 பேரும் அரசியல் தலையீட்டால் குற்றவாளிப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.குறித்த பெயர் பட்டியலில் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் உள்ளனர்.

குற்றத்தடுப்பு(சீ.ஐ.டி) பிரிவு பொலிஸாரின் புலன் விசாரனை உண்மையானதாக அமையும் என பல தரப்பினரும் நம்பி இருந்தனர்.ஆனால் அவர்கள் கூட இன்று அரசியல் வாதிகளுக்கு அடிபணிந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 18 ஆம் திகதி முதல் இன்று வரை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் நிரபதாரிகள் விடுவிக்கப்படுவார்கள் என சகலரும் எதிர் பார்த்திருந்தனர்.

ஆனால் குற்றத்தடுப்பு(சீ.ஐ.டி) பிரிவு பொலிஸாரின் புலன் விசாரனையாக நீதிபதியையும் சட்டத்தரணிகளையும் ஊடகவியலாளர்களுமாகவே இருந்ததே தவிர நீதியை நிலைநாட்ட குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்பது இங்கு கவலைக்குரிய விடையமாகும்.நீதிமன்றங்கள் கோவில் போன்றது.நீதிவான்கள் கடவுளுக்குச்சமனானவர்கள்.
ஆனால் இன்று மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் மன்னார் நீதிபதிக்கு அமைச்சரால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை என்பன இன்று எந்த வகையில் உரிய விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டுள்ளது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டியுள்ளது.


நீதித்துறைக்கே இந்த நிலைமை என்றால் சாதரண பொது மகன் ஒருவரின் கதி என்னவென்று நினைத்துப்பாருங்கள்.
-மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் மற்றும் நீதிபதிக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தரணிகள் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.அதில் உண்மை இருக்கின்றது.ஆனால் வெள்ளிக்கிழமைகள் தோறும் முஸ்ஸிம் மக்கள் வடக்கிலும் சரி தெற்கிலும் சரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுகின்றனர்.
வடக்கு முஸ்ஸிம்கள் அதுவும் மன்னார் முஸ்ஸிம்களின் மீள் குடியேற்றத்தில் தலையீடுகள் இடம் பெறுவதாகவும் அந்த தலையீடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றனர்.

இது எந்த விதத்தில் ஞாயம்.1990 ஆம் ஆண்டிற்கு முதலோ அல்லது அதன் பிற்பாடோ மன்னார் மாவட்டத்தில் இருந்து முஸ்ஸிம்கள் அல்ல சிங்கள மக்கள் கூட இடம்பெயர்ந்திருந்தால் அவர்கள் மன்னாரில் எந்த நேரத்திலும் வந்து மீள் குடியமர வேண்டும் அதனை தடுக்க எந்த சக்தியாலும் முடியாது.
ஆனால் கடந்த 18 ஆம் திகதி இடம் பெற்றது மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல்.
அதன் முழு சூத்திரதாரிகளும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக சட்டத்தரணிகள் இணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


ஆனால் முஸ்ஸிம் மக்கள் அதற்கு மாறக தமது மீள்குடியேற்றத்தை தடுத்து நிறுத்துவதாக கூறி எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.அரசியல் வாதிகளினாலும் அரச அமைச்சர் ஒருவரினாலும் மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவத்தை திசை திருப்பி குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் செயலாக காணப்படுகின்றது.
எனவே மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பெயர் பட்டியளில் இருந்து நீக்கப்பட்ட மன்னார் பொலிஸ் காண்ஸ்டப்பில் உற்பட முக்கிய 9 புள்ளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் பட்சத்திலேயே நீதி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை தொடரும் என்பதில் ஐயம் இல்லை.

சங்கதி24ற்காக-திவ்வியா


 

எதிர்வரும் நிகழ்வுகள்

Coming up event
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
கரும்புலிகள் நாள் 2013
Coming up event
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013
Coming up event
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013
Coming up event
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013
Coming up event
தமிழீழம் பற்றிப் பேசுவோம்
Coming up event
தாம் தீம் தகதிமிதா
Coming up event
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013
Coming up event
தேசத்தின் மயில்கள்
Coming up event
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
Coming up event
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
இளவேனில் - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி
Coming up event
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள்

இன்றைய படம்