நெய்வேலி அனல் மின்நிலையத் தலைமையக முற்றுகைப் போராட்டம் ஏன்? த.தே.பொ கட்சி


ஆக 3, 2012
 
வரும் 10.08.2012 அன்று, காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நெய்வேலி அனல் மின்நிலையத்தில் உற்பத்தியாகி கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரி, நெய்வேலி அனல் மின் நிலையத் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்துகின்றது.
 
இப்போராட்டம் குறித்து விளக்குவதற்காக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் உள்ளிட்ட கட்சியின் முன்னணித் தோழர்கள் பங்கேற்கும் செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில், வரும் 08.08.2012 அன்று காலை 10 மணியளவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
 
இச்சந்திப்பில், தமிழக ஊடகங்கள் தங்கள் சார்பில் செய்தியாளர்களை அனுப்பி கலந்து கொள்ளச் செய்து, இது குறித்த செய்தியினை தங்கள் ஊடகத்தில் வெளியிட வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
தோழமையுள்ள,

க.அருணபாரதி,
தலைமைச் செயற்குழு உறுப்பினர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி