ஜே.வி.பியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மக்களை வதைக்கும் ஆட்சிக்கெதிராக மக்களை அணிதிரட்டும் போராட்டம்”


ஜூலை 31, 2012
 

ஜே.வி.பியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மக்களை வதைக்கும் ஆட்சிக்கெதிராக மக்களை அணிதிரட்டும் போராட்டம்” இன்று வரக்காபொலயில் இருந்து தனது பயணத்தை முன்னெடுக்கிறது.

வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரையில் நடைபெறும் இந்த மக்கள் எழுச்சிப் போராட்டம் நேற்று மகரகமவிலிருந்து வரகாபொல வரை சென்றது.

ஜே.வி.பியின் சிரேஷ்ட தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான கட்சி உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். பயணிக்கும் அனைத்து நகரங்களிலும் மக்களைத் தெளிவுபடுத்தும் கூட்டங்களையும் ஜே.வி.பியினர் நடத்தி வருகின்றனர்.

இதற்கு மக்களின் அமோக ஆதரவும் கிடைத்துவருவதாக ஜே.வி.பியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.