யாழ். மருத்துவமனைப் பணிப்பாளர் பவானி இடைநிறுத்தம் - தொழில் சங்க நடவடிக்கை ஒத்திவைப்பு


ஜூலை 29, 2012
 

யாழ். மருத்துவமனைப் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதுடன், நாளைய தினம் வடமாகாணம் முழுவதும் திட்டமிட்டபடி நடாத்தப்படவிருந்த தொழில் சங்க நடவடிக்கை சுகாதார அமைச்சின் நடவடிக்கையினையடுத்து தற்காலிகமாக இடைநிறுத்தும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 

ஆனாலும் சுகாதார அமைச்சில் இருந்து சரியானதொரு பதில் கிடைக்காததை அடுத்து மருத்துவர் சங்கம் பல தடவைகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

அதனடிப்படையில் பணிப்பாளர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ். மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து முறையான விசாரணைகளை தொடர்வதற்காக பணிப்பளரை சுகாதார அமைச்சு மீளவும் அழைத்துள்ளது.

யாழ்ப்பாணம் மருத்துவமனையில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் மருத்துவமனை பணிப்பாளர் தொடர்புபட்டுள்ளது நிரூபணமானதையடுத்து நீதியானதொரு விசாரணையினையினை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, பணிப்பாளரை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பணியில் இருந்து இடை நிறுத்த வேண்டும் என யாழ் மருத்துவர் சங்கம் தாய்ச்சங்கத்தின் ஊடாக சுகாதார அமைச்சினைப் பணித்திருந்தது.

இருப்பினும் நாளைய தினம் வடமாகாணம் முழுவதும் திட்டமிட்டபடி நடாத்தப்படவிருந்த தொழில் சங்க நடவடிக்கை சுகாதார அமைச்சின் நடவடிக்கையினையடுத்து தற்காலிகமாக இடைநிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் விசாரணை முழுமையாக முடிக்கப்படாது, ஊழல் குற்றச்சாட்டுடைய யாழ். மருத்துவமனைப் பணிப்பாளர் மீளவும் நியமிக்கப்படும் பட்சத்தில் முன் அறிவித்தல் எதுவுமின்றி தொழில் சங்க நடவடிக்கையானது முன்னெடுக்கப்படும் என சங்கத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


 

எதிர்வரும் நிகழ்வுகள்

Coming up event
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
கரும்புலிகள் நாள் 2013
Coming up event
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013
Coming up event
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013
Coming up event
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013
Coming up event
தமிழீழம் பற்றிப் பேசுவோம்
Coming up event
தாம் தீம் தகதிமிதா
Coming up event
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013
Coming up event
தேசத்தின் மயில்கள்
Coming up event
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
Coming up event
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
இளவேனில் - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி
Coming up event
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள்

இன்றைய படம்