மாறிவரும் உலக நடைமுறையில் தமிழீழம் மலரும்


ஜூலை 23, 2012
 
1983 யூலையில் சிங்கள அரசின் திட்டமிடப்பட்ட படுகொலைகள் மூலம் தமிழீழம் ஒன்றே தமிழினத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் என்ற உண்மை தெளிவாக்கப்பட்டது.

இன்று 29 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதைவிட அதிகளவு ஆண்டுகள் சுதந்திரத்தை நோக்கிய சனநாயக ரீதியிலான போராட்டமும் அது பலனின்றிப்போகவே சனநாயகத்துடன் இணைந்த ஆயுதப்போராட்டமும் நடாத்தப்பட்டது.

ஆயுதப்போராட்டத்தின் மூலம் கொடுக்கப்பட்ட விலைமதிக்க முடியாத உயிரிழப்புக்களால் இன்று எமது போராட்டம் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சிங்களவர் எம்மினத்தின் மீது திணித்துள்ள இனப்படுகொலையினைத் தெளிவாக புரிந்துவைத்துள்ள அனத்துலகம் சிங்கள அரசின் மீது நடவடிக்கையெடுப்பதற்குத் தேவையான ஆதரவினை வழங்கவேண்டிய கட்டாய கடமை தமிழ் மக்களாகிய எம்மிடம் தான் உள்ளது. இதற்கு அடிப்படையான அரசியல் சந்திப்புக்கள் கவனயீPர்ப்பு நிகழ்வுகள், வெளிநாட்டவரை நோக்கிய விழிப்புணர்வு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நாம் குறிப்பிட்ட ஆதரவினை வழங்கமுடியும்.

இதேவேளை எமது நடவடிக்கைகளிற்கு எதிராகச் சிங்களவர்களும் எமது மக்கள் மத்தியில் பிரிவினையினை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள். இதில் அவர்களின் அடிமைகளாக இருப்பவர்களும் தேசிய விடுதலைக்காக ஆயத போராட்டம் மௌனிக்கும் வரையும் உழைத்து பின்னர் தன்னலவாதிகளாக மாறிய சிலரும் சிங்கள அரசுடன் இணைந்து செயற்படுவதும் எல்லோரும் அறிந்ததே.

எமது பலத்தினைப் பார்த்து அதிர்ந்துள்ள சிங்கள அரசு எமது மனத்துணிவை உடைப்பதற்கு உளவியல் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதுடன் எமது மண்ணில் சிங்களக் குடியேற்றத்தின் மூலம் எமது மண்ணையும் அபகரித்துவருகின்றது. இது பற்றிய விழிப்புணர்வினை அனைத்துலகமட்டத்தில் ஏற்படுத்தவேண்டிய கட்டாய கடமை எம்மிடமுள்ளது. இதற்கான நடவடிக்கையிலும் நாம் இறங்கவேண்டும்.

மாறிவரும் உலக நடைமுறையில், எமது தாயகவிடுதலை சாத்தியமாகிவரும் இவ்வேளையில் அதனை விரைவுபடுத்துவதற்கு எமது தொடர்ச்சியான முயற்சிகளே அடிப்படையாகவுள்ளது.

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்

டென்மார்க் தமிழர் பேரவை

 

எதிர்வரும் நிகழ்வுகள்

Coming up event
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
கரும்புலிகள் நாள் 2013
Coming up event
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013
Coming up event
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013
Coming up event
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013
Coming up event
தமிழீழம் பற்றிப் பேசுவோம்
Coming up event
தாம் தீம் தகதிமிதா
Coming up event
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013
Coming up event
தேசத்தின் மயில்கள்
Coming up event
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
Coming up event
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
இளவேனில் - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி
Coming up event
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள்

இன்றைய படம்