இயக்கச்சி விபத்தில் இருவர் பலி 18 பேர் காயம்!


ஜூலை 22, 2012
 

ஆனையிறவு பளை வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 18 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள அதேவேளை இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை நால்வர் பலியானதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியாருக்கு சொந்தமான அதி சொகுசு பஸ்ஸே நேற்று இரவு 10 மணியளவில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குறித்த பேரூந்து கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் பயணித்ததாகவும் இயக்கச்சி வளைவில் எதிரில் வந்த வாகனத்திற்கு வழி கொடுக்க முற்பட்டபோது பேரூந்தின் சாரதி கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இதனையடுத்து பேரூந்து இரண்டு தடவைகள் தலைகீழாக புரண்டெழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது மேலும் இந்தச் சம்பவத்தில் பேரூந்து முற்றாக சேதமடைந்துள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை விடயமறிந்து காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.