சிறிய நாடான சிறீலங்காவை பார்த்தே மத்திய அரசு பயப்படும் போது அமெரிக்காவை கண்டிப்பதோ, இழப் பீடு பெற்று தருவதோ நடக்காத காரியம் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் துபாய் அருகே கடலில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான ராமநாதபுரம் மாவட்ட மீனவர் தோப்புவலசையை சேர்ந்த சேகரின் வீட்டுக்கு சென்று அவரது குடும் பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு இந்தியா முற்றப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலில் தமிழர்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்.
தமிழகத்துக்கு உரிய ஒதுக்கீடுகளை தராமல் பழிவாங்கி வருகிறது. மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு அமெரிக்காவை கண்டித்து அறிக்கை தரக்கூட பிரதமருக்கு துணிவு இல்லை.
தமிழக மீனவர்களை காக்க மத்தியில் அங்கம் வகிக்கும் தமிழக கட்சிகள் கூட நடவடிக்கை எடுக்க வில்லை. இதேபோல பதவியில் உள்ள தமிழக காங்கிரசாரும் எந்த முயற்சியும் செய்யவில்லை. பலியான சேகரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு பெற்று தந்து அரசு வேலை கிடைக்கவும், சேகரின் உடலை கொண்டு வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கிரஸ் தயவு இல்லாமல் உள்ள மாநில ஆட்சியை அது விரும்பவில்லை. இதனால் மாநில அரசை மத்திய அரசு மதிப்பதில்லை.
டெசோ மாநாடு நடத்துவது கேலி கூத்தான செயல். இதனால் இலங்கை தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை’’என்று தெரிவித்தார்.
தமிழர்கள் பாதிக்கப்பட்டால் கேட்க யாரும் இல்லை. ஆனால் கேரளாவில் பாதிக்கப்பட்டால் உடனே நீதி கிடைக்கிறது. காரணம் கேரளத்தினர் அதிகார மட்டத்தில் பரவி உள்ளதோடு இன உணர்வோடு உள்ளனர். அந்த இன உணர்வு தமிழக அரசியல்வாதிகளிடம் இல்லை என்றார்.