கிளிநொச்சி பூநகரியில் தீ விபத்து மாணவி படுகாயம்!


ஜூலை 17, 2012
 


பூநகரியில் தவறுதலாக ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த நிலையில் பாடசாலை மாணவி ஒருவர் யாழ். பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு தனது வீட்டில் விளக்கு ஏற்றுவதற்காக மண்ணெண்ணெய்யை ஊற்றிய சமயம் தனது உடையிலும் ஊற்றப்பட்ட போதும் அதனைப் பொருட்படுத்தாது குறித்த மாணவி விளக்கைப் பற்ற வைத்தபோது உடையில் தீ பற்றிப் பரவியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் உடனடியாக அவர் பூநகரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.

பூநகரி மகாவித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி கற்கும்இ பூநகரி பள்ளிக்குடாவைச் சேர்ந்த சந்தனகுமார் மோனிஷா என்ற 14 வயது மாணவியே மேற்படி தீக்காயங்களுக்கு உள்ளானவராவார்.


 

எதிர்வரும் நிகழ்வுகள்

Coming up event
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
கரும்புலிகள் நாள் 2013
Coming up event
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013
Coming up event
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013
Coming up event
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013
Coming up event
தமிழீழம் பற்றிப் பேசுவோம்
Coming up event
தாம் தீம் தகதிமிதா
Coming up event
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013
Coming up event
தேசத்தின் மயில்கள்
Coming up event
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
Coming up event
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
இளவேனில் - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி
Coming up event
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள்

இன்றைய படம்