மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துரைமுகப்பகுதியில் உப்புக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கும் மன்னார் ஜேசப்வாஸ் நகர் மீனவர்களுக்கும் தொழில் செய்வது தொடர்பில் தொடர்ந்தும் நீண்ட நாட்களாக இடம் பெற்று வந்த முருகல் நிலையினைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி ஜேசப் வாஸ் நகர் மீனவர்களது வாடிகள் உள்ளிட்ட உடமைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பாதீக்கப்பட்ட ஜோசப்வாஸ் நகர் மன்னார் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் காவல்துறை குறித்த சம்பவத்துடன் ஈடுபட்ட மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த சிலரை கைது செய்வதற்காண நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த முறைப்பாட்டை இறத்துச் செய்யக்கோரியும் மன்னார் ஜோசப்வாஸ் நகர் மீனவர்களை உப்புக்குளம் கோந்தைப்பிட்டி மீன்பிடி துறையில் இருந்து வெளியேற்றக்கோரியும் மன்னார் உப்புக்குளம் மக்கள் திடீர் என எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில திங்கட்கிழமை மன்னார் நகரில் ஈடுபட்டனர்.
திங்கட்கிழமை காலை 8.45 மணியளவில் மன்னார் 'சதோசா' விற்பனை நிலையத்திற்கு முன் ஒன்று திரண்ட பல நூற்றுக்கணக்காண உப்புக்குளம் வாழ் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
-குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது உப்புக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் வயோதிபர்கள் சிறுவர்கள் என வேறு பாடு இன்றி கலந்து கொண்டனர்.
இதன் போது குறித்த மக்கள் பல்வெறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் காலை8.45 மணிமுதல் 10.45 மணிவரை போக்குவரத்துக்கள் பாதீக்கப்பட்டதோடு அப்பகுதியில் வன்முறை ஏற்படுவதற்காண சாத்தியக்கூறுகள் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் கலகம் அடக்கும் காவல்துறையினர் அவ்விடத்திற்கு வரவளைக்கப்பட்டனர்.
எனினும் மன்னார் காவல்துறையினரது கோரிக்கைக்கு செவிமடுக்காத அந்த மக்கள் தமது நீண்ட நாள் பிரச்சினைக்கு உடனடித்தீர்வு கிடைக்க வேண்டும் என தெரிவித்து அந்த மக்கள் வீதியில் அமர்ந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
எனினும் மன்னார் காவல்துறை நிலைய பொருப்பதிகாரி துஸார தலுவத்த உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் இருந்தும் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்ற முடியாத நிலையில் காணப்பட்டனர்.
இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் மன்னார் நகர சபையின் அரச தரப்பு உறுப்பினர் மீனவ சங்கங்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
காலை 10.50 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் காவல்துறை அத்தியட்சகர் குறித்த ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்கலோடு கலந்து ஆலோசித்ததோடு குறித்தபகுதியில் உள்ள யோசப்வாஸ் நகர் மீனவ்hகலது வாடிகள் மற்றும் மீன் பிடி உபகரணங்களை உடனடியாக மன்னார் பொலிஸார் அவ்விடத்தை விட்டு அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தமையினைத் தொடர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்தை விட்டு களைந்து சென்றனர்.
சுமார் 2 மணித்தியாளங்கலாக மன்னாரில் போக்குவரத்துச் சேவைகள் பாதீக்கப்பட்டிருந்தது.இதே சமயம் குறித்த ஆர்ப்பாட்டம் பொது மக்களுக்கு பாதீப்பபை ஏற்படுத்தியதோடு எவ்வித அனுமதியும் இன்றி நடாத்தப்பட்டுள்ள போதும் மன்னார் காவல்துறை அமைதி காத்தமை நீதிக்கு புறம்பான செயலாக காணப்பட்டதாக பொது அமைப்புக்களும்இசமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.

.jpg)
.jpg)
.jpg)
