சுவிட்சர்லாந்துக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டின் இறுதிக்குள் தயாராகி விடும் என்று சுவிசின் பொருளாதார அமைச்சர் ஜோஹான் ஸ்கீனிடர் அம்மான் தெரிவித்துள்ளார்.
சுவிசின் பொருளாதாரத்துறை அமைச்சர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார், அவருடன் 25 தொழிலதிபர்கள், 12 அதிகாரிகள் மற்றும் பல பத்திரிக்கையாளர்கள் வந்திருந்தனர்.
இங்கு சுவிஸ் மற்றும் சீனத் தொழிலதிபர்கள் பங்கேற்ற சீனோ- சுவிஸ் பொருளாதார கூட்டம் நடந்தது.
இதுகுறித்து சீன- சுவிஸ் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஸ்டீபன் கிராபெர் கூறுகையில், இந்த கூட்டத்தின் மூலம் இருதரப்பினரிடையே சுமூகமான உறவு முறை உருவானது என்றும், தங்களது வருங்கால பங்குதாரர்களை பார்த்து பேச வாய்ப்பு கிடைத்தது என்றும் தெரிவித்தார்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டின் இறுதிக்குள் தயாராகி விடும் என்று தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் தயாராவதில் சில பிரச்னைகளும், சவால்களும் உள்ளன. ஆனால் இவை அனைத்திற்கும் இந்த ஆண்டுக்குள் தீர்வு கிடைத்துவிடும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.