மன்னார் தனியார் போருந்து ஒன்றின் நடத்துனரும் சாரதியும் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் பஸார் பகுதியில் வைத்து மன்னார் அரச பேரூந்தின் ஊழியர்கள் சிலரினால் பேரூந்தினுள் வைத்து தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மன்னார் தனியார் பேரூந்து சங்கத்தினர் நோற்று காலை முதல் மதியம் வரை மேற்கொண்ட பணிப்பகிஸகரிப்பினைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட ஊழியர்களில் இரண்டு பேரை கைது செய்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-இந்த நிலையில் தமது பணியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்ட மையினைக்கண்டித்து அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிமுதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் இரவு நேர அரச பேருந்துகள் சேவையில் ஈடுபடாததன் காரணத்தினால் பயணிகள் பெரும் அசெகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
இன்று திங்கட்கிழமை காலை அரச பேரூந்தில் பருவச்சீட்டுக்களை பயண் படுத்தி போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு பிரச்சினைக்கு முகம் கொடுத்தனர்.
-தாக்குதலுக்கு உள்ளான மன்னார் தனியார் பேரூந்து நடத்துனரும் சாரதியும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.
(மன்னார் நிருபர்)