சிறீலங்காவின் நடப்பாண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் 700 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த வருடத்தின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் இது ஐந்து வீத அதிகரித்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
இதனைத் தவிர பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 975 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது
இளம்வயது பெண்களே அதிகளவில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கில் தமிழர்வாழ் இடங்களில் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.