சிறீலங்காவின் சிறைச்சாலைகளில் அதிகளவான கைதிகளை தடுத்து வைத்துள்ளதனால்தான் நெருக்கடி-ICRC


ஜூலை 2, 2012
 

சிறைச்சாலைகளில் நிலவிவரும் சனநெரிசல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணஒத்துழைப்பு வழங்கப்படும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

சிறீலங்காவின் சிறைச்சாலைகளில் அதிகளவு சனநெரிசல் நிலைமைஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதனால் பல்வேறு சிறைச்சாலை அதிகாரிகளும் கைதிகளும் பல்வேறுஅசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சிறைச்சாலைகளில் அதிகளவான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைநெருக்கடி நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் அண்மையில் ஒப்புக் கொண்டுள்ளது.

போதியளவு இடவசதியின்றி கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதனால்பல்வேறு மனிதாபிமான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
சிறீலங்கா சிறைச்சாலை கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் சனநெரிசல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களின் தரத்தை மேம்படுத்தஉதவிகளை வழங்கத் தயார் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.