பாகிஸ்தான் அதிபர் சர்தார, ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பதவியும் வகிக்கிறார். இவர் மீது ஊழல் புகார்கள் உள்ளன. இதுகுறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால், அதிபருக்குள்ள சிறப்பு அந்தஸ்து காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று பிரதமராக இருந்த யூசுப் ரசா கிலானி கூறினார். அதனால் நீதிமன்ற அவம திப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அதன்பின் பிரதமர் பதவியில் இருந்து கிலானி நீக்கப்பட்டார்.
இதையடுத்து புதிய பிரதமராக ராஜா பர்வேஸ் பதவியேற்றார். ஆனால், அதிபர் சர்தாரி மீதான ஊழல் வழக்கில் அரசின் நிலைப்பாடு குறித்து 15 நாளில் பதில் அளிக்க, புதிய பிரதமர் ராஜா பர்வேசுக்கும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பரபரப்பான சூழ்நிலையில், அரசியல் நடவடிக்கைகளில் இருந்து அதிபர் பதவி விலக வேண்டும்.
கட்சி தலைவர் பதவியில் இருந் தும் செப்டம்பர் 5ம் தேதிக்குள் விலக வேண்டும் என்று சர்தாரிக்கு லாகூர் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. லஷ்கர் தொய்பா தீவிரவாத இயக்க நிறுவனர் ஹபீஸ் சயீத்தின் வக்கீல் ஏ.கே.தோகர், வக்கீல் முகமது அசார் சித்திக் ஆகியோர் அதிபர் சர்தாரிக்கு எதிராக லாகூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை ஐகோர்ட் தலைமை நீதிபதி உமர் அடா பண்டியால் தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் முன்னிலையில் நேற்று நடந்தது.
அதிபர் சர்தாரிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்குகிறோம். அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலக அதிபருக்கு கடந்த ஆண்டே இந்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோர்ட் உத்தரவை எல் லோரும் மதிக்க வேண்டும். எனவே, செப்டம்பர் 5ம் தேதிக்குள் அதிபர் சர்தாரி அரசியல் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் விலக வேண்டும். இல்லாவிட்டால் கடும் பின்விளைவுகள் ஏற்படும். கோர்ட் உத்தரவை மதிக்காவிட்டால் சர்தாரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.