தமிழர் நிலத்தினை அபகரிக்கும் சிங்களத்திற்கு எதிராக எழுந்திடுவீர்!


ஜூன் 17, 2012
 

வடக்கில் தமிழர்களின் வாழ்இடங்களில் சிங்களவர்களின் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் மறைமுகமாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றது படையினர் நிலைகொண்டுள்ள இடங்களை மக்களின் பாவனைக்கு விடாமல் தமிழர்களின் பூர்விக நிலங்களில் பௌத்த விகாரைகளை அமைத்து சிங்களபௌத்த பேரினவாதத்தின் அடையளாங்களை நிலைநிறுத்துவதில் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

இலங்கைத்தீவில் தமிழினத்தை தொன்று தொட்டு அழித்து தமிழர் வாழ்இடங்களில் சிங்கள ஆதிக்கத்தினை நிலைநாட்டிக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் வரிசையில் சிறீமா தொடக்கம் இன்று மகிந்தவரை தொடர்ந்து செல்கின்றது.
தமிழர்களின் வீரியத்தினை அழித்துவிட்டு தமிழின பரம்பலை அடக்கிவைத்து சிங்கள ஆட்சியின் கீழ் தமிழர்களை அடக்கி வைக்க நினைக்கும் கனவில் சிங்கள அரசு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

குறிபாக வடக்கிலேதன் அதிகளவு பரப்பில் சிங்களப்படையினர் நிலைகொண்டுள்ளார்கள் ஒருலட்சத்திற்கு மேற்பட்ட படையினர் நிலைகொண்டுள்ள இடமாக வடக்கு காணப்படுகின்றது குறிப்பாக யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு,கிளிநொச்சி,வவுனியா,மன்னார் போன்ற மாவட்டங்களில் மக்களின் செறிவிற்கு நிகராக படையினர் நிலைகொண்டுள்ளார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் இடைப்பட்ட பிரதேசமாக காணப்படும் மணலாறு என்று முன்னர் அழைக்கப்பட்ட வெலிஓயா பிரதேசத்தில் 500 ஏக்கர் நிலப்பரப்பு சிங்கள குடியேற்றத்திற்கு ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 22 வீதமாக இருந்த சிங்களவர்கள் அண்மைய ஆண்டின் கணக்கெடுப்பின் படி 72 வீதமாக உயர்ந்துள்ளார்கள் இது திருகோணமலை மாவட்டத்தின் சிங்களவர்களின் அத்துமீறிய குடியேற்றத்தினை எடுத்துக்காட்டுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் 21 வீதமாக இருந்த சிங்களவர்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குள் 90 வீதமாக உயர்ந்துள்ளார்கள் இது அம்பாறை மாவட்டத்தின் சிங்களவர்களின் சிங்கள குடியேற்றபரம்பலை எடுத்துக்காட்டுகின்றது இவ்வாறுதான் வடக்கிலும் பலமாவட்டங்களில்;
தற்போது குடியேற்றும் சிங்கள பரம்பலை கணக்கிடமுடியாது
குறிப்பாக படையினரின் பின்னணியில் சிங்கள மக்களை குடியேற்றுவதில் சிங்கள அரசு நன்கு திட்டமிட்டு மேற்கொள்கின்றது என்பதை திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் சிங்கள குடியேற்றம் ஊடாக கண்டுகொள்ளக்கூடியதாக இருக்கும்

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச சபைக்கு கீழ்உள்ள 24 கிராமங்களை உள்ளடக்கிய 11 கிராம சேவர் பிரிவுகள் காணப்படுகின்றது இவற்றில் 15ற்கு மேற்பட்ட கிராமங்கள் சிறீலங்காப்படையின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அங்கும் சிங்கள மக்களை குடியேற்றும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோன்று திருகோணமலை மாவட்டத்தில் மகாவலி குடியேற்றத்திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட கந்தளாய் சிங்களக்குடியேற்றம்.


இவ்வாறு வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் ஆறாயிரம் ஏக்கருக்கும் அதிகமாகபரப்பில் சிங்க படையினர் நிலைகொண்டுள்ளார்கள்.
இவர்கள் நிலைகொள்வதன் ஊடாக அவர்களின் குடும்பங்களை குடியேற்ற துடிக்கும் சிங்களஅரசு படையினரை முன்னணியில் வைத்து அவர்களது குடும்பங்களை பின்னணியில் குடிறேற்றும் செயற்பாடு வன்னியில் மேற்கொள்ளப்படுகின்றது
குறிப்பாக திருமுறிகண்டி கொக்காவில் பகுதிகளில் நான்காயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பினை சிங்கள படையினர் கையகப்படுத்தியுள்ளார்கள்,
குறிப்பாக பாதிவு செய்யப்படாமல் உள்ள தகவல்களின் படி முள்ளிவாய்க்கால் பகுதியில் 18ஏக்கர் வரையான நிலப்பரப்பினை சிங்கள படையினர் கையகப்படுத்தியுள்ளார்கள் அத்துடன் ஆனந்தபுரம்,இரணைப்பாலை,புதுக்குடியிருப்பு பகுதிகளில் பெருமளவான காணிகளில் படையினர் நிலைகொண்டுள்ளார்கள்.
இதேபோல் கிளிநொச்சியில் பூநகரி மற்றும் விடத்தல்தீவு,முழங்காவில்,அக்கராயன் போன்ற பகுதிகளில் உள்ள பெருமளவான காணிகள் மற்றும் ஆனையிறவு பகுதியில் உள்ள பெருமளவான காணிகளை படையினர் கையகப்படுத்தியுள்ள நிலையில் அங்கு நிலைகொண்டுள்ள படையினரின் குடும்பங்களை அவர்கள் அண்டிய பகுதிகளில் குடியேற்றும் திட்டத்தினை சிங்கள அரசு நன்கு மேற்கொண்டு வருகின்றது.

தமிழர் வாழ் இடங்களில்தற்போது காணி உறுதிகளை கொண்ட காணிகளை உறவுகளுக்கு ஊடாகவே இடம்மாற்றக்கூடிய சட்டம் இருக்கின்றது,முஸ்லீம்மக்களும் சிங்கள மக்களும்,தங்களது அரசியல் செல்வாக்குகளால் பிரதேச செயலாளர்களை கொண்டு தங்களை காணிகளுக்கு உரித்துடையவர்களாக பெயர்மாற்றும் பாதிவு செய்தல் செயற்பாடுகளும் மறைமுகமாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.

சிங்களஅரசின் திட்டமிட்ட தமிழர் மீதான காணி அபகரிப்பினை புலம்பெயர் தளத்தில் உள்ள தமிழ்உறவுகள் கவனத்திற்கொள்ளவேண்டி நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
உங்கள் உறவுகளால் தமிழர்தாயகத்தில் விற்கும் நிலையில் உள்ள காணிகளை தமிழ்மக்களே செந்தபெயரில் கொள்வனவு செய்வதற்கு முன்வரவேண்டும்.

இல்லையேல் அதனை சிங்களவன் விலைக்கு வாங்கினால் அந்த கிராமமே சிங்கள மயமாகும் செயற்பாட்டிற்கு ஈழத்தில் உள்ள தமிழ்மக்களும் துணைபேவதாக கருதமுடியம்.

(செய்திஆய்வு-சுபன்)