சரணடைந்து காணாமல் போன உறவுகளின் எதிரொலியாக சர்வதேசத்தின் பார்வைக்கு!


ஜூன் 13, 2012
 


சரணடைந்த மற்றும் காணாமல் போன நபர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிடுவதாக பாதுகாப்பு அமைச்சகம் 13 ந் திகதி அறிவித்திருந்ததுயாவரும் அறிந்ததே. அதை அறியும் பொருட்டு அவர்களின் உறவினர்கள் சென்று ஏமாந்து திரும்பியதும் அறிந்த ஒரு நிகழ்வுதான்.

போரினால் எலாவற்றையும் இழந்து துயரின் பிடியில் வாழம் எம்மை மென்மேலும் உளரீதியாக துவம்சம் செய்கிறது அரசு. அதனூடாகஎமது எதிர்காலத்தை நம்பிக்கையை இருட்டடிப்புச் செய்யவிழைகிறது. ஒரு மகனை மகளை கணவனை தந்தையை சகோதரனை இழந்த வலியோடு பொருளாதார ரீதியாக பாலியல்ரீதியாக உளரீதியாக நாம் சந்திக்கும் சமூக நெருக்கடிகள் ஏராளம்.
எமது கண்முன்னே மே 18 ந் திகதி 2009 ஒரு பாதிரியார் முன்னிலையில்எமது உறவுகள் சரணடைந்தார்கள். மூன்றுவருடங்கள் கடந்தும்இன்று வரைஎமக்கு ஒரு பதிலும் இல்லை. போர்க்குர்ற்றவாளி சரத் பொன்சேகாகூறிய ஒரு கூற்று உண்மைக்குப் புறம்பானது. அதாவது மே17 ற்குப் பிறகு யாருமே சரணடையவில்லை என்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கும் ஒரு செயலேயன்றிவேறில்லை.

எமது உறவுகள் இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியாமலே இன்றுவரை இந்த செய்தி இருட்டடிப்புச் செய்யப்பட்டு வருகின்றது.அவர்ளின் நிலையை இன்றுவரை இந்த அரசாங்கம் ஏன்வெளியிடவில்லை என்பது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.நீதிக்குப் புறம்பான அநீதிகளை இழைத்த மாதிரியே எமதுஉறவுகளையும் இல்லாதொழித்து விட்டார்களா? இதற்குரிய பதிலைபாதிக்கபட்ட எமக்கு கூறுவது ஒரு அரசாங்கத்தின் கடப்பாடு என்பதுஉலகத்திற்கே தெரியும். இருந்தும் ஏன் இந்த இருட்டடிப்பு?காணாமல்போனவர்களைப் பற்றிய செய்திகளை பல வதந்திகளையும்
உண்மைகளை திரிபு படுத்தியும் உலவவைத்துக் கொண்டுஇருக்கிறார்கள்.

முன்னால் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் எழிலன் படையினரின் தடுப்பில் தற்போது உள்ளார் என்று அண்மையில் சிறீலங்காஅரசு சார்பில் ஜெனிவா சென்றிருந்த கீர்த்தி வர்ணகுல சூர்யகூறியதாக யூன் 4 ந் திகதி 2012 அன்று செய்திகள் வெளிவந்திருந்தமைகுறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த செய்தி வெளிவருவதற்கு முன்னர் எழிலன் சரணடையவில்லை என போர்க்குற்றவாளி சுவேந்திரசெல்வா தொட்டு பல இராணுவத் தளபதிகள் கூறியிருந்தமையும்குறிப்பிடத்தக்கது.

எதற்கு இந்த முரண்பட்ட செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன?இதன் அர்த்தம் தான் என்ன? எமது உறவுகள் இருக்கின்றார்களா
இல்லையா.?எமது காத்திருப்புக்கள் ஏமாற்றத்தில் முடியப்போகிறதா அல்லதுமகிழ்ச்சியில் எம்மை ஆழ்த்தப்போகிறதா? விடை தெரியாத எமது
எதிர்காலத்தை இன்று சர்வதேசத்திடம் ஒப்புகுடுத்துள்ளோம்.எமது உறவுகளின் நிலையை தயவு செய்து தெரியப்படுத்தஆவணப்படுத்துங்கள். பல துரோகங்களை இழைத்தவர்கள் வாழும் உலகில் நாட்டுக்காக தம் வாழ்நாளைக்கழித்தவர்கள் வாழ வேண்டும் என நாம் தவிப்பதில் தவறுண்டா உலகே......


இது ஒரு பாதிக்கப்பட அபலையின் மனவுணர்வு.