வலிகாமம் தென்மேற்கில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் மிதிவண்டி திருட்டு!


ஜூன் 9, 2012
 

யாழில் மிதிவண்டி திருட்டிற்கு பெயர்போன இடமாக வலி. தென்மேற்கு பிரதேச செய லகம் விளங்குவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த சில மாதங் களுக்குள் அங்கு ஏழு சைக்கிள்கள் திருடப் பட்டுள்ளன. திட்டமிடப்பட்டு இடம் பெற்று வரும் இத்திருட்டினால் தேவை களின் நிமித்தம் அங்கு செல்லும் மக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.

நிர்வாகச் செயற்பாடு பரவலாக்கப்பட்ட தைத் தொடர்ந்து தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தங்கள் பிரதேசத் திலுள்ள பிரதேச செயலங்களை மக்கள் நாடி வருகின்றனர். இந்த வகையில் சண்டி லிப்பாயிலுள்ள வலி. தென்மேற்குப் பிர தேச செயலகத்திற்கு தினசரி நூற்றுக்கண க்கான மக்கள் வந்துசெல்கின்றார்கள்.

இளம் பெண்கள் உட்பட அங்குவரும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் சைக்கிள் களை வளாகத்திற்குள் விட்டுப் பூட்டி விட்டுத் தங்கள் தேவைகளை நிறைவு செய் வதற்காகக் அலுவலகம் செல்வது வழக்கம். இவர்களின் நடமாட்டத்தை அவதானிக்கும் திருடர்கள் பூட்டியிருக்கும் சைக்கிள்களை ௭டுத்துச் செல்கின்றார்கள். கடந்த சில மாதங்களுக்குள் இவ்வாறாக ஏழு சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன.

செயலகத்தில் கடமையாற்றும் இளம் பெண் ஒருவரின் இரு சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத் தக்கது. அடிக்கடி நடைபெறும் இத் திருட்டைத் தடுக்கும் நோக்கில் சிறீலங்கா காவல்துறையினரும் அசமந்த போக்கில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.


 

எதிர்வரும் நிகழ்வுகள்

Coming up event
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
கரும்புலிகள் நாள் 2013
Coming up event
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013
Coming up event
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013
Coming up event
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013
Coming up event
தமிழீழம் பற்றிப் பேசுவோம்
Coming up event
தாம் தீம் தகதிமிதா
Coming up event
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013
Coming up event
தேசத்தின் மயில்கள்
Coming up event
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
Coming up event
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
இளவேனில் - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி
Coming up event
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள்

இன்றைய படம்