தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்த பிரிட்டன் பிரதமர் கேமரூனிடம் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர் கோரிக்கை


ஜூன் 9, 2012
 

சமீபத்தில் சூடானில் நடைபெற்றது போல இலங்கையிலும் ஓர்தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பபை நடத்துவதற்கு ஆதரவுதெரிவிக்கும்படி ஐக்கிய அமெரிக்காவில் இயங்கும் தமிழ்க்குழுவான ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர் பிரிட்டன் பிரதமர்கேமரூனுக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில் கேட்டுள்ளனர்.

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர் பிரிட்டன்  பிரதமர் டேவிட்கெமரூனுக்கு எழுதிய கடிதத்தில் சூடான்வாக்கெடுப்பு மூலம் ஒரு நீண்டகால இரத்தக்களரியுடனான உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்ததுடன், தென்சூடான் என்ற புதிய நாட்டைஉருவாக்கும் ஒரு நல்ல முடிவாக அமைந்ததுஎன்று குறிப்பிட்டுள்ளனர்.

செய்தித் தொடர்பாளரின் கருத்துப்படி இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிந்து விட்டது. ஆனால் இந்தத் தீவில் வாழும்தமிழ் மக்களுக்கு பாதுகாப்பும் அமைதியும் கிடைக்காது தொடர்ந்து துன்புறுகின்றனர்.  கொழும்பு ஆட்சியினால் வடகிழக்கில் தமிழர்கள் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்க முடியாது. ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர், பலமாதங்களுக்கு முன் அமெரிக்க இராஜாங்கத் துறையினரைசந்திக்கும் போது தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கு உதவும்படி கோரியிருந்தனர்.

அமெரிக்க இராஜாங்கத் துறையினரை ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர் சந்திக்கும் போது தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பைப் பற்றிமுழுமையாக விளங்கப்படுத்தியிருந்தனர். இதனை இராஜாங்கத் துறையினர் மிகவும் உன்னிப்பாக கேட்டனர். ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர் பிரிட்டனையும், இந்தியாவையும் இந்த தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும்படி கோருவதையே தமது அடுத்த முயற்சியாக மேற்கொண்டுள்ளனர்.

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர் பிரிட்டன் பிரதமர்கேமரூனுக்கு எழுதிய கடிதத்தில் இந்தப்பிரச்சினையை ஒருபோதும் அரசியல் மூலம் தீர்க்க முடியாது. சூடானில் நடந்தது போன்று ஓர் பொதுவாக்கெடுப்பை நடத்துவதன் மூலம், சிறிலங்காவிலுள்ள சிங்களவர்களும், தமிழர்களும்  பயன்பெறலாம் என தாம் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

பிரிட்டன் பிரதமர் கேமரூனுக்கு எழுதிய கடிதத்தை முழுமையாக வாசிக்கஇங்கே செல்லவும்

http://www.tamilsforobama.com\letters\PMCameron_referendun_SriLanka.html