தமிழக அகதி முகாம்களில் காணப்படும் பிரச்சிரனைகளினால் அவுஸ். செல்ல முற்படுகின்றனர் -ம.தி.மு.க.


ஜூன் 8, 2012
 

தமிழக அகதி முகாம்களில் ஈழத்தமிழ் அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளே அவர்களை ஆபத்தான படகுகள் மூலம் அவுஸ்திரேதலியா நோக்கிச் செல்வதற்கு தூண்டுவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழக அகதி முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் அகதிகள் கடுமையான கட்டுப்பாடுகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் சந்திப்பதாக அந்தக் கட்சியின் தமிழக மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர் கே.எம்.நிசாம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கேரள கடற்கரையை பயன்படுத்தி சட்டவிரோத படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 150க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகளில் கைது செய்யப்பட்டவர்களைத் தவிர்ந்த ஏனையவர்கள் நேற்று முன்தினம் இரவு தமிழகத்தின் திருநெல்வேலி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பபட்டுள்ளனர்.

இதன்போது குறித்த பகுதியைச் சேர்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி உள்ளிட்ட சில அமைப்புக்களை சேர்ந்த உறுப்பினர்கள் கேரள காவல்துறையினருக்கு எதிராக மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த போராட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள நிசாம், தமிழக அகதி முகாம்களில் தமிழ் அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளே அவர்களை ஆபத்தான படகுகள் மூலம் அவுஸ்திரேதலியா நோக்கிச் செல்வதற்கு தூண்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.


 

எதிர்வரும் நிகழ்வுகள்

Coming up event
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
கரும்புலிகள் நாள் 2013
Coming up event
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013
Coming up event
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013
Coming up event
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013
Coming up event
தமிழீழம் பற்றிப் பேசுவோம்
Coming up event
தாம் தீம் தகதிமிதா
Coming up event
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013
Coming up event
தேசத்தின் மயில்கள்
Coming up event
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
Coming up event
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
இளவேனில் - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி
Coming up event
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள்

இன்றைய படம்