திருக்கேதீஸ்வர விகாரைஅமைந்துள்ள பகுதியில் புராதன பொருட்கள் கண்டுபிடிப்பு -தொல்லியல் திணைக்களம் தெரிவிப்பு


ஜூன் 3, 2012
 

 

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் புதிதாக குடியியேறிளுள்ள பௌத்த திருத்தளப்பகுதியில் பௌத்த மதத்திற்கான புராதன பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


மன்னார் மாவட்ட செயலகத்திற்கு தொல்லியல் திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
வடமாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட எள்ளுப்பிட்டி கிராம வேவையாளர் பிரிவில் திருக்கேதீஸ்வர கிராமத்தில் அமைந்திருக்கும் ரஜமகாவிகாரை அனுராதபுர காலத்தின் மிகவும் சரித்திரிம் வாய்ந்த பெறுமதிமிக்க தலமாக காணப்படுகின்றது.
சயலமைய காலுடைய உருவங்கள் ஆட்டுக்கல் புத்த சமயத்துடன் தொடர்புடைய பல புராதன பொருட்கள் அடையாள சின்னங்களாக கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும் தொல்லியல் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது.
மாதோட்ட துறைமுகத்தைப்போன்றே இத்தளத்தினையும் ஒரு பொருத்தமான நடைமுறையின் கீழ் கொண்டுவரும் முகமாக ஆரம்ப கட்ட நடவடிக்கையின் பரிசீலனைகள் முடிவடைந்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலப்பரப்பை தொல்லியல் தினைக்களத்தின் பகுதியாக அடையாளம் காணப்பட இருப்பதால் எனது உத்தியோகத்தரால் கடந்த பல நாட்களாக ஆராயப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆராட்சி அறிக்கையின் அடிப்படையில் இந்நிலப்பரப்பினை எல்லைக்கல் இடுவதற்கு ஆயத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

தொல்லியல் தினைக்களத்தின் இவ்வேலைத்திட்டங்கள் முடிவடையும் வரை இவ்விகாரையினை தொடர்ந்தும் நடாத்தி செல்வதற்கு எமது அனுமதியினை பெற்றுக்கொடுப்பதோடு மன்னார் பிரதேச செயலாளரின் ஊடாக நில அளவையாளருக்கு உத்தியோக பூர்வ அறிவித்தலை விடுத்து அதன் மூலம் வரைபடம் ஒன்றும் தயாரிக்கப்படும் என அறியத்தருகின்றேன். தேவையேற்படும் பட்சத்தில் தங்களுடைய உத்தியோகத்தர்களையும் தந்து உதவி செய்வதற்கு ஆயத்தமாக இருப்பதாகவும் தொல்லியல் தினைக்களத்தினால் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.

குறித்த தகவலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சரத் ரவீந்திர மூடி மறைத்துள்ளார்.குறித்த அறிக்கையின் பிரகாரம் கடந்த சில மாதங்களுக்குள் குறித்த புத்தர் சிலை அகற்றப்பட மாட்டாது என தெரிய வருகின்றது.தற்போது குறித்த புத்தர் சிலைக்கு இரகசியமான முறையில் வர்ணப்பூச்சுக்கள் பூசப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.


 

எதிர்வரும் நிகழ்வுகள்

Coming up event
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
கரும்புலிகள் நாள் 2013
Coming up event
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013
Coming up event
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013
Coming up event
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013
Coming up event
தமிழீழம் பற்றிப் பேசுவோம்
Coming up event
தாம் தீம் தகதிமிதா
Coming up event
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013
Coming up event
தேசத்தின் மயில்கள்
Coming up event
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
Coming up event
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
இளவேனில் - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி
Coming up event
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள்

இன்றைய படம்