முள்ளிவாய்க்கால் நிலைவேந்தல் சுவரெட்டிகளை ஒட்டியது யார்? - மிரட்டும் புலனாய்வுத் துறையினர்


மே 17, 2012
 

யாழ்,பல்கலைக் கழகத்தில் மே 18 தொடர்பான சுவரெட்டிகள் ஒட்டியது யார்? எனக் கேட்டு சிறிலங்கா புலனாய்வுத் துறையினர் பல்கலைக் கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மிரட்டிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்,பல்கைக்கழகத்தில் நேற்று முன்தினம் தமிழர்களின் இன அழிப்பின் இறுதி நாளான மே 18  நினைவு  கூரும் முகமாக பல்வேறு இடங்களில் சுவரெட்டிகள் ஒட்டப்பட்டமை அனைவரும் அறிந்ததே.

நேற்று இரவு பல்கலைக்கழக வளாகத்தின் பின் மதிற் சுவர் வழியாக ஏறிப் பாய்ந்த பத்திற்கு மேற்பட்ட புலனாய்வுத் துறையினர் பல்கலைக் கழகத்தின் உள்பகுதியில் தேடுதல் நடாத்தியுள்ளனர்.

ஆனால் எந்தவிதமான பலனும் கிடைக்காததால் ஆத்திரமடைந்து இரவு நேர பாதுகாப்பு உத்தியோகத்தர்களை ஆயுதங்களை காட்டியும் மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இவ்விடயம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது. நாங்கள் இதனைப் பார்க்கவில்லை என்று கூறவும் இவர்களை தனியாகக் கொண்டு சென்று விசாரிக்க வேண்டும் என்று கூறியதுடன் தீய வார்த்தைகளை கொண்டு மிரட்டிச் சென்றுள்ளனர்.

அத்துடன் நேற்று மாலை 6 மணியளவில் பல்கலை வளவினுள் அதுமீறி நுழைந்த புலனாய்வுப் பிரிவினர் மீண்டும் மாணாவர்கள் ஏதாவது சுவரெட்டிகளை ஒட்டுவார்கள் என்று நள்ளிரவுவரை காத்திருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.