மறக்க முடியுமா மே 18 – க. தமிழவன்


மே 16, 2012
 

மதி கெட்ட சிங்களவர் வன்னியில் புரிந்த செயல்களை அப்பாவி மக்கள் குடியிருப்புக்கள் மீது அடுக்குகடுக்காய் குண்டு மழை பொழிந்ததை மறக்க முடியுமா?

சிறியோர் பெரியோர் என்ற பேதமின்றி சிக்கிய யாவரையும் சின்னாபின்னமாக்கியதை ஆகாய விமானங்கள் மூலம் குண்டு வீசி அந்த வன்னி மக்களை அழித்தொழித்ததை மறக்க முடியுமா?

ஆலயங்கள் ஆஸ்பத்திரிகள் எவற்றையும் விட்டு வைக்காது அழித்துத் தரைமட்டமாக்கியதை பள்ளிக் கூடங்களில் தஞ்சமடைந்தோர் மீது பல் குழல் எவுகணைக் குண்டுகள் ஏவிக் கொன்றதை மறக்க முடியுமா?

பதுங்கு குழிகளில் பதுங்கியிருந்ததோரை அப்பதுங்கு குழிகளுக் குள்ளேயே உயிரோடு புதைத்ததை குண்டு பட்டுக் காயப்பட்ட அநேகரைக் குழி தோண்டி மண்ணுக்கிரையாக்கியதை மறக்க முடியுமா?

யுத்த சூனியப் பிரதேசங்களுக்குள் மக்களைப் போகச் சொல்லி சுற்றி வளைத்த செல்ல அடித்துக் கொண்றதை மறக்க  போருக்குள் அகப்பட்ட மக்களுக்க உணவோ மருந்தோ போக விடாது தடுத்ததை மறக்க முடியுமா?

ஐசிஆர்சி முதலான தொண்டு நிறுவனங்கள் ஆவசர உதவிகள் செய்யவிடாது மறுத்ததை ஆழிக் கட்டுப்பாட்டுக்குள் மக்களை வரச் சொல்லி அவர்களை வரும் வழியில் சுட்டுத் தள்ளியதை மறக்க முடியுமா?

புலிச் சீறுடைகளை அணிந்த சிங்களக் காடையர் வலிந்து மக்களை வரவைத்து அழித்ததை கொத்துக் குண்டுகளைப் போட்டு கொலை வெறியாடியதை தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசித் தமிழரைக் கொண்றதை மறக்க முடியுமா?

நச்சுக் குண்டுகளைப் பிரயோகித்து நம் மக்களை அழித்ததை மறக்க வேறு வழியின்றி ஆழி ஆக்கிரமித்த இடங்களுக்கு வந்தவர்கிடையே வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து புலிகளைப் பழிகாரர்களாக்கியதை மறக்க முடியுமா?

ஒரே நாளில் பல்லாயிரம் தமிழரை ஒட்டு மொத்தமாய் கொன்று குவித்ததை  வன்னிப் பெரு நிலபரப்பைச் சுடுகாடாக்கி வன்னி மக்களை அகதிகளாக்கியதை  வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகளை வெட்டியும் சுட்டும் கொன்றதை மறக்க முடியுமா?

வெறித்தனமாய் மக்களைக் கொன்று விட்டு வெடி கொழுத்திக் கொண்டாடியதை சண்டையால் ஏற்பட்ட தடயங்களை இல்லாதக்கி சர்வதேசத்தை நம்ப வைத்ததை

கைகளலே சிக்கிய பெண்களை கற்பழித்துக் கொன்றதை மறக்க முடியுமா?

கைது செய்த இளைஞர் யுவதிகள் பலரை காணாமற் போன தாக்கியதை பல பேரை அங்கவீனர்களாக்கிப் பார்த்து மகிழ்ந்ததை அப்பாவி உள்ளங்கள் பலரை அநாதை ஆக்கியதை மறக்க முடியுமா?

மின்சார வேலிக்குள் எம் மக்களை அடைத்து வைத்து இன்பமாய் அவர்கள் வாழ்வாதாய்க் கூறிய தை சந்தேகத்தில் தடுத்து வைத்து பலரின் உறுப்புக்களை சர்வதேச நாடுகள் சிலவற்றிற்குப் பரிசளித்ததை மறக்க முடியுமா? ஏன்றும் மறக்க முடியுமா?

புனர்வாழ் வென்று கூட்டிச் சென்ற பலரைக் கொன்று புதைத்து இல்லாதாக்கியதை பசுக்கன்றைக் கொன்ற தன் மகனைப் பாரபட்சங் காட்டாது கொன்ற மனுநீதிச் சோழனை மறக்க முடியுமா?

யுத்த குற்றம் புரிந்த  புத்தர் வழி மரபினைரைத் தண்டிக்காத எலக நாடுகளை மறக்க முடியுமா?

 - க. தமிழவன்


 

எதிர்வரும் நிகழ்வுகள்

Coming up event
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
கரும்புலிகள் நாள் 2013
Coming up event
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013
Coming up event
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013
Coming up event
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013
Coming up event
தமிழீழம் பற்றிப் பேசுவோம்
Coming up event
தாம் தீம் தகதிமிதா
Coming up event
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013
Coming up event
தேசத்தின் மயில்கள்
Coming up event
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
Coming up event
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
இளவேனில் - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி
Coming up event
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள்

இன்றைய படம்