
மகிந்த ராஜபக்ஷ அண்மையில் கொரியா சென்றிருந்தபோது, அவருக்கு பெரிய கண்டம் இருப்பதாகக் கூறி போலியகொட வித்யாலங்கார விகாராதிபதி வெலிமிட்டியாவே குசலதம்ம தேரர், சிங்கள சமியார் ஒருவரை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் சென்று விசேட பூசையொன்றை நடத்தியுள்ளார்.
காளியம்மனின் கோபத்திற்கு மகிந்த ஆளாகியுள்ளதாக தெரிவித்த தேரர், இந்தப் பூசைக்காக மகிந்தவை செய்மதி தொழில்நுட்பம் மூலம் இணைத்துக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் இருந்து பூசாரி செய்மதி தொழில்நுட்பம் ஊடாக ஆலோசனைகளை வழங்கியுள்ளதுடன் மகிந்தவை பல பரிகாரங்களை அங்கிருந்து செய்துள்ளார்.
இதன்போது காளியம்மனின் சிலையொன்றுக்கு பால் அபிசேகம் செய்ய வேண்டும் என பூசாரி கூற, மகிந்தவின் படையணி கொரியாவில் காளியம்மன் சிலையொன்றைத் தேடிக் கண்டுபிடிக்க அலையாய் அலைந்துள்ளது.
கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்புடைய வாசு கனகரத்னம் என்பவரிடமிருந்தே இறுதியாக காளி சிலையைப் பெறப்பட்டுள்ளது.
மகிந்த தங்கியிருந்த ஹோட்டலில் இருந்ததே இந்தப் பூஜையில் பங்கேற்றுள்ளார். இலங்கை நேரம் அதிகாலை 2.30 அளவிலேயே இந்தப் பூசை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது மகிந்தவின் தலைமுடியொன்றையும், கால் விரல் நகம் ஒன்றையும் வெட்டி, காளியம்மனின் பாதங்களுக்கு காணிக்கையாக்குமாறு பூசாரி ஆலோசனை வழங்கியுள்ளார். பின்னர், இலங்கையிலுள்ள அனைத்து காளி கோயில்களிலும் ஒரே நேரத்தில் பரிகாரப் பூசையொன்றை செய்யுமாறும் பூசாரி மகிந்தக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
காளி கோயில் அம்மனின் கோபத்திற்கு மகிந்த ஆளாகியுள்ளதாக பூசாரி தெரிவித்ததை அடுத்து, பூசை முடிவடைந்தவுடன் பொலிஸ்மா அதிபரைத் அதிகாலை வேளையில் தொடர்புகொண்ட மகிந்த, தம்புள்ளை காளி கோயிலுக்கு பூரண பாதுகாப்பை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பூசை மிகவும் இரகசியமாக நடத்தப்பட்டுள்ளதுடன், பூசைக்காவே செய்மதி தொழில்நுட்பம் ஏற்பாடு செய்யப்பட்டதை அறிந்துகொண்ட அதிகாரிகள் இருவரையும் மகிந்த உடனடியாக இடமாற்றம் செய்துள்ளார்.