இந்தியன் வங்கியின் கடந்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ1747 கோடி


மே 13, 2012
 
இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த ஆண்டில் ரூ.1,747 கோடியை எட்டி உள்ளது என்று வங்கியின் தலைவர் டி.எம்.பாசின் கூறினார்.

சென்னையில் இந்தியன் வங்கியின் தலைவரும், மேலாண்மை இயக்குனருமான டி.எம்.பாசின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2012-ம் நிதியாண்டில் இந்தியன் வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.3 ஆயிரத்து 463 கோடியாக உயர்ந்துள்ளது.

முந்தைய நிதி நிதியாண்டைவிட 5.2 விழுக்காடு கூடுதல் வளர்ச்சியாகும். கடந்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.1,714 கோடி.

வட்டியின் மூலம் கிடைக்கும் வருமானம் கடந்த ஆண்டைவிட 30.6 விழுக்காடு உயர்ந்துள்ளது. வட்டி சாராத வருமானம் 9.5 விழுக்காடு உயர்ந்துள்ளது.

வங்கியின் மொத்த வர்த்தகம் 16.8 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது., மொத்த டெபாசிட்டுகள் 14.2 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.

முன்னுரிமை திட்டங்களுக்கான கடன்கள் 15.6 விழுக்காடு அதிகரித்துள்ளோம். விவசாயக் கடன்கள் 20.9 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது.

கல்விக்கடன் ரூ.415 கோடி உயர்ந்து ரூ.3 ஆயிரத்து 222 கோடியாக உள்ளது. இந்த ஆண்டு 93 ஆயிரத்து 215 மாணவர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

52 கிராமங்களில் வங்கிச் சேவை மையங்கள், 45 கிராமங்களில் நடமாடும் வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியன் வங்கியில் 1,955 கிளைகள் உள்ளன. 95 கிளைகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. வங்கிக்கு 3 வெளிநாட்டு கிளைகள் உள்ளன என்றார் அவர்.

 

எதிர்வரும் நிகழ்வுகள்

Coming up event
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013
Coming up event
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013
Coming up event
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013
Coming up event
தமிழீழம் பற்றிப் பேசுவோம்
Coming up event
தாம் தீம் தகதிமிதா
Coming up event
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013
Coming up event
தேசத்தின் மயில்கள்
Coming up event
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
Coming up event
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
இளவேனில் - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி
Coming up event
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள்

இன்றைய படம்