தங்களின் மேலான பங்களிப்பை நாடும் "பொங்குதமிழ் மாநாடு 2012 கருநாடகம் "


மார் 26, 2012
 

அன்பிற்கும், பாசத்திற்கும்,மதிப்பிற்குமுரிய தமிழின மக்களுக்கு ‘பொங்குதமிழ் 2012 கருநாடகம்’ விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் வணக்கத்துடன் விடுக்கும் வேண்டுகோள்.

யாழ் பல்கலையில் தொடங்கி எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் உலகெங்கும் நம்மின ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தியும், தமிழினம் தன் கலை, இலக்கியம், பண்பாடு இவற்றினூடாக இனவெழுச்சியுற்று, தடைகளைத் தகர்த்து ஒற்றுமையுடன் ஓரினமாய் கிளர்ந்தெழுந்து நம்மின விடுதலையை நோக்கி முன்னகரக்கூடிய சாத்தியத்தை உருவாக்கும் நிக்ழவாகப் ‘பொங்குதமிழ்’ விழா நம்மிடையே முன்னெடுக்கப்படுகிறது.

காலத்தின் கட்டாயத்தால் நாம் நம்மின வரலாற்றின் தவிர்க்கமுடியாத முக்கிய தருணத்தில் நிறுத்தப்பட்டுள்ளோம். வேதனைகளையும், சோதனைகளையும், துரோகங்களையும், காட்டிக்கொடுப்புகளனைத்தையும் இதுவரை கண்டு, அனுபவித்த ஓரினம் இவ்வுலகில் உண்டென்றால் அது நம் தமிழினமேயாம். நம்மைச் சுற்றிப் பின்னப்படும் சதிகளைத் தகர்த்து முன்னேற ஒரு வழி உண்டென்றால் அது நம்மின ஒற்றுமையும், ஒருமைப்பாடுமன்றி வேறேதுமில்லை.

உலகெங்கிலும் பேரெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட ‘பொங்குதமிழ்’  நிகழ்வானது நம்மை தமிழன் என்ற ஒற்றைக் குடையின் கீழ் ஒன்றுபட்டு, நம் மொழி, கலை, கலாச்சாரம், இலக்கியம் மற்றும் பண்பாட்டை காத்திடும் கருவியாகவும், உலகிற்கு நம்மின ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும் இந்தியாவில் முதன்முறையாக கருநாடகத்தில் முன்னெடுக்கப்படுகிறது.

பொங்கு தமிழ் 2012 கருநாடகம் மாநாட்டிற்குத் தமிழர்களாகிய நாம் அனைவரும் நமது கட்டாயக் கடமையென்றெண்ணி தங்களின் இனத்திற்க்கான பங்கெடுப்பாகத் தம்மால் இயன்ற வகையில் அனைத்துவித்ததிலும் உடல், உள்ள, பொருளுதவிகளையும், முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும், நல்கி தமிழுக்கும், தமிழினத்திற்கும், தமிழர் ஒற்றுமைக்கும் துணை நிற்க வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இங்ஙனம்,

தலைமை ஒருங்கிணைப்பாளர்,

பொங்கு தமிழ் 2012, கருநாடகம்.

PayPal மூலம் தங்கள் பங்களிப்பை வழங்கிட கீழே உள்ள இணைப்பை பயன்படுத்துங்கள்.

https://www.paypal.com/cgi-bin/webscr?cmd=_s-xclick&hosted_button_id=QQP9H46P2H89E

 




நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே, செயலால் வளர்ந்தபின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்.

- தமிழீழ தேசியத் தலைவர்


 

எதிர்வரும் நிகழ்வுகள்

Coming up event
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
கரும்புலிகள் நாள் 2013
Coming up event
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013
Coming up event
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013
Coming up event
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013
Coming up event
தமிழீழம் பற்றிப் பேசுவோம்
Coming up event
தாம் தீம் தகதிமிதா
Coming up event
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013
Coming up event
தேசத்தின் மயில்கள்
Coming up event
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
Coming up event
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
இளவேனில் - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி
Coming up event
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள்

இன்றைய படம்