05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

செப்டம்பர் 14, 2017

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை அகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. 

அதிக மழை காரணமாக குகுலே கங்கையின் வான் கதவொன்றும் திறந்து விடப்பட்டுள்ளது. இதேவேளை இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது. 

செய்திகள்