“வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை“!

செப்டம்பர் 14, 2017

புதிய நீதி வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் சி.கா.செந்திவேல் எழுதிய “வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை“ என்ற அரசியல் பகுப்பாய்வு விமர்சன நூலின் அறிமுக நிகழ்வு புத்தூரில் நடைபெறவுள்ளது.

 புத்தூர் மேற்கில் அமைந்துள்ள கலைமதி மக்கள் மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி.ப. 4 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

திரு கா. செல்வம் கதிர்காமநாதன் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் வரவேற்புரையைத் திருமதி லதா உதயதீபன், நூல் அறிமுக உரையைச் சட்டத்தரணி சோ. தேவராஜா, நூல் மதிப்பீட்டு உரைகளை எழுத்தாளர் க. தணிகாசலம், திரு த. நவதாஸனும் நிகழ்த்தவுள்ளனர். நூலாசிரியர் பதிலுரையைச் தோழர் சி. கா. செந்திவேல் வழங்குவார். நன்றியுரைத் திரு கி. வாகீசனும் நிகழ்ச்சித் தொகுப்பை திரு அ. இராஜசேகரமும் மேற்கொள்ளவுள்ளார். 

இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.

செய்திகள்