வினாச் சிக்கல் குறித்து அறிக்கையிடப் பணிப்பு!

செப்டம்பர் 14, 2017

பரீட்சைகள் திணைக்களத்தால், கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதியன்று நடத்தப்பட்ட, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாவொன்றில் காணப்படுவதாகக் கூறப்படும் சிக்கல் தொடர்பில், அறிக்கையிடுமாறு பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளரிடம், கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரியுள்ளார்.

கணித வினாத்தாளில் இரண்டாம் பகுதியில் 39 ஆவது வினா தொடர்பான விடையில் சிக்கல் காணப்படுவதாக, விசனம் எழுந்துள்ளது.  தற்பொழுது விடைத்தாள்களை மதிப்பிடும் பணியும் நிறைவடைந்துள்ளது. இதனால், இது தொடர்பிலான விசனம் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

எந்தவொரு பிள்ளைக்கும் அநீதி இடம்பெறாதவாறு இப்பிரச்சினைக்கு தீர்வு தருமாறும் கல்வியமைச்சர் அக்கோரிக்கையில் கூறியுள்ளார்.

செய்திகள்