விசேட அதிரடிப்படையினரின் வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு

August 12, 2017

இன்று(12) மாலை 5.30 மணியளவில் நீர்கொழும்பு, குரான பிரதேசத்தில்  விசேட அதிரடிப் படையின் ஜீப் வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

வான் ஒன்றில் வந்த இனந்தெரியாத குழுவொன்றினால் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  எவ்வாறாயினும் விசேட அதிரடிப் படையினர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் இரண்டு பேர் காயமடைந்துள்ளதுடன், சந்தேக நபர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

செய்திகள்
சனி ஒக்டோபர் 21, 2017

தகு­தி­யா­ன­வர்­கள் பலர் இருக்க அநு­ரா­த­பு­ரத்­தைச் சேர்ந்த சிங்­க­ள­வரை வடக்கு மாகாணப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யின்