வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!

செப்டம்பர் 12, 2018

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் இன்று  மின்சாரம் தாக்கியதில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை அவரது வீட்டு கிணற்றை மின் இயந்திரம் மூலம் துளையிட்டு கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் குறித்த இளைஞன் பாதிப்படைந்த நிலையில் உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பரிசோதனைகளை மேற்கொண்ட வைத்தியர் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததாக குறித்த இளைஞனின் நண்பர்கள் தெரிவித்தனர்.பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

செய்திகள்