வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 60 மில்லியன் ஒதுக்கீடு!

February 22, 2018

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக 60 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால், இந்த நிதி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட 92 சதவீத நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறித்த நிதி ஒதுக்கீட்டடின் ஊடாக சுமார் 14 ஆயிரம் குடும்பங்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

செய்திகள்