வடக்கு மாகாணப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் முகா­மை­யா­ளர் நிய­மனத்தில் சிக்கல்!

ஒக்டோபர் 21, 2017

தகு­தி­யா­ன­வர்­கள் பலர் இருக்க அநு­ரா­த­பு­ரத்­தைச் சேர்ந்த சிங்­க­ள­வரை வடக்கு மாகாணப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் முகா­மை­யா­ளராக நிய­மித்­துள்­ளீர்­கள். அவர் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைப்­பா­ள­ரா­க­வும் இருக்­கி­றார். அப்­ப­டிச் செயற்­பட முடி­யுமா?  இவ்­வாறு நாடா­ளு­மன்­றில் விச­னத்­து­டன் கேள்வி எழுப்­பி­னார், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற விவா­தத்­தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்­கில் தமிழ் மக்­களே பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்­ற­னர். வடக்கு மாகாண போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் பிராந்­திய முகா­மை­யா­ள­ராக அநு­ரா­த­பு­ரத்தைச் சேர்ந்­த­வர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

வடக்­கில் அந்­தப் பத­வியை வகிக்­கக் கூடிய எத்­த­னையோ நபர்­கள் உள்­ள­னர். அவர்­க­ளுக்­கான சந்­தர்ப்­பம் மறுக்­கப்­பட்டு பெரும்­பான்மை இனத்­தைச் சேர்ந்த ஒரு­வ­ருக்கு அந்­தப் பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது.

பிராந்­திய முகா­மை­யா­ளர் யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள அவ­ரு­டைய அலு­வ­ல­கத்துக்குச்  செல்­லாது வவு­னி­யா­வில் புதி­தாக அலு­வ­ல­கத்­தை அமைத்து அங்கு தான் இருக்­கின்­றார். இதனை எவ்­வாறு ஏற்­றுக்­கொள்ள முடி­யும்?

இந்த முகா­மை­யா­ளர் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைப்­பா­ள­ரா­க­வும் நிய­மிக்­கப் பட்­டுள்­ளார். போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் பிராந்­திய முகா­மை­யா­ளர் எவ்­வாறு கட்­சி­யொன்­றின் அமைப்­பா­ள­ராக இருக்க முடி­யும்.

மகிந்த ஆட்­சிக் காலத்­தில் தேர்­தல்­க­ளின் போது பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக இருந்த பசில் தமது கட்சி வெற்றி பெறு­வ­தற்­காக அர­சின் உயர் பத­வி­க­ளில் தமக்கு வேண்­டி­ய­வாறு மாற்­றங்­க­ளைச் செய்­தார்.

இய­லு­மா­ன­வ­ரை­யில் தமக்­குச் சார்­பான அதி­கா­ரி­களை நிய­மித்து தேர்­த­லில் வெற்­றி­க­ளைப் பெறு­வ­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்ட போதும் தமிழ் மக்­கள் அதற்­கு­ரிய பாடத்­தைப் புகட்­டி­யி­ருந்­த­னர்.

அரச சேவை­யில் உள்ள ஒரு­வ­ருக்கு அமைப்­பா­ளர் பத­வியை வழங்குவது பொருத்­த­மற்­றது. முகா­மை­யா­ளர் சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைப்­பா­ள­ராக இருப்­பதை நாங்­கள் எதிர்க்­க­வில்லை.

அவர் முகா­மை­யா­ளர் பத­வி­யில் இருந்து கொண்டு அந்­தப் பத­வி­யை வகிப்­ப­தால் அர­சி­யல் ரீதி­யான செயற்­பா­டு­க­ளுக்­காக அதி­கா­ரங்­கள் பிர­யோ­கிக்­கப்­ப­டும் ஆபத்தே உள்­ளது. அது தொடர்­பில் தாங்­கள் கவ­னம் எடுப்­பீர்­கள் என்று நம்­பு­கின்­றேன் -– என்­றார்.

செய்திகள்