யாழ். செல்கிறார் மைத்திரி!

December 18, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 23 ஆம் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெறவுள்ள தேசிய மீலாத் வைபவத்தில் பங்கேற்பதற்காகவே அவரின் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்குரே உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்றும் சில தகலல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகள்