யாழ்ப்­பா­ணக் குடாநாட்­டில் இருந்து 2லட்­சம் பனம் விதை­கள் கொள்­வ­னவு!

ஒக்டோபர் 21, 2017

கடந்த ஒரு மாத­கா­லத்­தில் யாழ்ப்­பா­ணக் குடாநாட்­டில் இருந்து 2லட்­சம் பனம் விதை­கள் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளன. பனம் பழத்­தை­யும் மக்­கள் ஆர்­வத்­து­டன் கொண்­டு­வந்து தரு­கின்­ற­னர் என பனை அபி­வி­ருத்­திச் சபை­யின் விரி­வாக்க முகா­மை­யா­ளர் கோபா­ல­ கி­ருஸ்­ணன் தெரி­வித்­தார்.

பனை அபி­வி­ருத்தி சபை­யி­னால் பனம்­ப­ழங்­கள் மற்­றும் பனம் விதை­கள் கொள்­வ­னவு செய்­யப்­ப­டு­கின்­றன. தர­மான பனம்­ப­ழம் 5 ரூபா­வா­க­வும், பனம் விதை ஒரு ரூபா­வா­க­வும் கொள்­வ­னவு செய்­யப்­ப­டும் என அறி­விக்­கப்­பட்­டது.

இது தொடர்­பாக பனை அபி­வி­ருத்­திச்­ச­பை­யின் விரி­வாக்­கல் திட்ட முகா­மை­யா­ளர் – கா.கோபா­ல­கி­ருஸ்­ணன் தெரி­வித்­த­தா­வது:

வலந்­த­லைச்­சந்தி காரை­ந­க­ரில் அமைந்­துள்ள பனம்­சார் பல்­தொ­குப்பு நிலை­யத்­தி­லும், சிங்கை நகர் புலோ­லி­யில் அமைந்­துள்ள பனை­சார் உற்­பத்தி நிலை­யத்­தி­லும் பனம் விதை­கள் மற்­றும் பனம்­ப­ழங்­கள் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டன.

பனம்­சார் உற்­பத்­திப் பொருள்­கள் தற்­போது நாடு­மு­ழு­வ­தும் பரவி வரு­கின்­றன. பனம்­சார் உற்­பத்­திப் பொருள்­க­ளால் பல குடும்­பங்­கள் தங்­கள் வாழ்­வா­தா­ரத்­தைப் பெருக்­கிக் கொள்­கின்­றன.

இதனை ஊக்­கு­விக்கவே நாடு ழுழு­வ­தும் இருந்து பனம் பழம், பனம்­விதை­கள் பனை அபி­வி­ருத்­திச் சபை­யால் கொள்­வ­னவு செய்­யப்­ப­டு­கின்­றன.

கடந்த செப்ெரம்­பர் மாதத்­தின் நடுப்­ப­கு­தி­யில் யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் கொள்­வ­னவு நட­வ­டிக்­கை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

கொள்­வ­னவு செய்­யப்­ப­டும் பனம்­ப­ழத்­தின் மூலம் பனம்­களி செய்­யப்­ப­ட­வுள்­ளது. பனம்­விதை மூலம் பனம் பாத்தி போடப்­ப­ட­வுள்­ளது.

அத்­தோடு பொது அமைப்­புக்க­ளி­னூ­டாக பனம் விதை­களை வழங்கி நடு­கை­யும் செய்­யப்­ப­டவுள்ளது. பனை­வ­ளத்தைச் சார்ந்­துள்ள குடும்­பங்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை அதி­க­ரிக்­கச் செய்­வதே இதன் நோக்­க­மா­கும்.

மக்­கள் இத­னைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக் கொள்­கின்­ற­னர். பலர் முன்­வந்­து பனம்­வி­தை­களை கொண்­டு­வந்து தரு­கின்­ற­னர். இது­வரை 2லட்­சம் பனம்­வி­தை­கள் தரப்­பட்­டுள்­ளன. பனம் பழங்­க­ளை­யும் கொண்­டு­வந்து தரு­கின்­ற­னர்.

யாழ்ப்­பா­ணத்­தில் இரண்டு இடங்­க­ளி­லேயே கொள்­வ­னவு நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ டு­வ­தால் சிறி­ய­தொகை பனம் பழத்தை கொண்­டு­வந்து தரு­வ­தில் மக்­கள் சிர­மங்­களை எதிர்­கொள்­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அதா­வது 5 முதல் 10 வரை­யான பனம் பழங்­கள் அவர்­க­ளி­டம் இருப்­பின் அதைத் தரு­வ­தில் சிர­மப்­ப­டு­ கின்­ற­னர் எனவே இதற்கு மாற்­றுத் திட்­டம் ஒன்­றை­யும் நடை­­முறைப்­ப­டுத்­த­வுள்­ளோம்.

அதா­வது மக்­கள் ஒன்று சேர்ந்து 25 முதல் 30 வரை­யான பனம் பழங்­க­ளைச் சேக­ரித்து வைத்­தி­ருப்­பார்­க­ளா­னால் நாங்­கள் அங்கு நேரில் சென்று கொள்­வ­னவு செய்­யத் தீர்­மானித்துள் ளோம்.

அடுத்­த­டுத்த வரு­டங்­க­ளில் பனம் விதை மற்­றும் பனம் பழங்­களை தரு­வ­தில் மக்­கள் இன்­னும் ஆர்­வம் காட்­டு­வார்­கள் என எதிர்­பார்க்கின்­றோம் –என்­றார்.

செய்திகள்