யாழில் பாரி­ச­வாத சிகிச்சை நிலை­யக்கூடம்!

ஒக்டோபர் 21, 2017

யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் பாரி­ச­வாத சிகிச்சை நிலை­யக்கூடம் அமைக்­க­ப்ப­ட­வுள்­ளது. 700 மில்­லி­யன் ரூபா செல­வில் 6 அடுக்கு மாடி­க­ளைக் கொண்டு இதற்­கான கட்­ட­டம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது என்று போதனா வைத்­தி­ய­சா­லை­யின் பணிப்­பா­ளர் சத்­தி­ய­மூர்த்தி தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;

வடக்கு மாகா­ணத்­தின் ஒரே­யொரு போதனா வைந்­தி­ய­சா­லை­யா­கத் திக­ழும் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் கூட பக்­க­வா­தங்­க­ளால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளுக்­கான நவீன சிகிச்­சைக்­கூ­டம் இல்லை எனச் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

இத­னால் போதனா வைத்­தி­ய­சாலை வளா­கத்­தில் 700 மில்­லி­யன் ரூபா செல­வில் நவீன வச­தி­கள் கொண்ட புதிய பாரி­ச­வாத சிகிச்சை நிலை­யக் கூடம் ஒன்று 6 அடுக்கு மாடிக் கட்டட­மாக அடுத்த ஆண்டு நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளது.

அதில் இரண்டு அடுக்கு மாடி­க­ளில் பாரி­ச­வாத நோயா­ளி­க­ளுக்­கான விடுதி வச­தி­கள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. ஒரு­மா­டி­யில் அதற்­கான வசதி வாய்ப்­புக்­கள் பயிற்­சிக் கூடங்­க­ளும் அமை­யும், எஞ்­சிய 3 மாடி­க­ளில் ஏனைய விடு­தி­க­ ளுக்­கும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

குறித்த திட்­ட­மா­னது 2018ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்டு அவற்றின் பணிகள் இடம்பெறும். பணிகள் நிறை வடைந்ததன் பின் குறித்த விடுதி 2020ஆம் ஆண்டிலிருந்து இயங்கும் என்­றார்.-

செய்திகள்