மேல் மாகாண சபையின் முக்கிய பதவிகள் சிலவற்றில் மாற்றம்

செப்டம்பர் 13, 2017

மேல் மாகாண சபையின் ஆளும் கட்சி அமைப்பாளர் குணசிறி ஜெயலத், அவைத் தலைவர் சுனில் ஜெயமினி ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

அம் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரியவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதேவேளை, இவர்கள் அண்மையில் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 20வது திருத்தச் சட்டம் குறித்த யோசனைக்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலும், மேல் மாகாண சபையின் புதிய ஆளும் கட்சி அமைப்பாளராக சந்தன ஜெயநாத் மற்றும் அவைத் தலைவராக பெக்டர் பெத்மகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

செய்திகள்