முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் குண்டு வெடிப்பு!

February 13, 2018

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சில வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த வெடிப்புச் சம்பவம் நேற்று(12) திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று முல்லைத்தீவு காவல் துறையினர் தெரிவித்தனர். 

 முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைக்குப் பிரதேச நபர் ஒருவர் தீ வைத்தபோது அதற்குள் இருந்த ஆர்.பி.ஜி ரக வெடிபொருள் வெடித்ததால் குப்பை மேட்டிலிருந்த சில கழிவுப் பொருள்கள் அருகிலுள்ள வீடுகள் மீது சிதறி வீழ்ந்திருக்கின்றன.

 சில வீடுகளுக்கு சிறிதளவான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக முல்லைத்தீவு காவல் துறையினர்  குறிப்பிட்டனர். இந்த வெடிப்புச் சம்பவத்தால் எவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் காவல் துறையினர் குறிப்பிட்டனர்.

 போருக்குப் பின்னர் முல்லைத்தீவுப் பகுதியில் வெடிபொருள் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தப் பணிகளில் இந்த வெடிபொருள் கைவிடப்பட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 

செய்திகள்
செவ்வாய் August 14, 2018

பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகளான பா.செயந்தினி, ஏ.டி.மேரி கொன்சிகா...