முதலமைச்சர் அணியில் எங்களுக்கு ஆதரவாக 12 எம்.எல்.ஏ.க்கள்!

செப்டம்பர் 18, 2017

தனக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் அணியில் தங்களுக்கு ஆதரவாக இன்னும் 12 எம்.எல்.ஏ.க்கள் ஸ்லீப்பர் செல்களாக இருப்பதாக தினகரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரிடம் கடிதம் கொடுத்திருந்தனர். அவர்களில் ஜக்கையன் மட்டும் மீண்டும் எடப்பாடி அணிக்கு திரும்பினார். அதன்பின்னர் மோதல் முற்றிய நிலையில், ஆட்சியை அகற்றும் பணியை தொடங்கிவிட்டதாக டிடிவி தினகரன் தொடர்ந்து கூறி வந்தார். இதையடுத்து தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் இன்று உத்தரவிட்டுள்ளார். 

இதனை எதிர்த்து தினகரன் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சபாநாயகரின் இந்த நடவடிக்கையை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதா மறைந்தபின் சசிகலா நினைத்திருந்தால் முதல்வர் ஆகியிருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கினார். ஆனால், அவர் துரோகம் செய்துவிட்டார். இவர்களைப் போன்ற துரோகிகளால் தான் நாங்கள் 30 ஆண்டுகளாக கட்சியில் இருந்து விலகியிருக்கிற சூழ்நிலை இருந்தது.

18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. கவர்னர் தேவையில்லாமல் காலம் தாழ்த்தியதால் தான் இந்த ஜனநாயக படுகொலை நடந்தது. இந்த நிலை மாறும். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நாங்கள் யார் என்று காட்டுவோம். பொறுமையும் நிதானமும் தோற்றதாக சரித்திரம் இல்லை. ஒரு சில தினங்களில் வெற்றியை அடைந்து விடுவோம். இந்த ஜயநாயக படுகொலைக்கு நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம். இப்போது முதலமைச்சர் அணியில் எங்களுக்கு ஆதரவாக 12 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 

மத்திய அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுத்த அரசாங்கம். அவர்கள் ஜனநாயகத்தை மதித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிடடால், தேர்தல் வரும்போது மக்கள் அதனை மறக்கமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டபோதிலும், முதலமைச்சர் அணியில் தங்களுக்கு ஆதரவாக 12 எம்.எல்.ஏ.க்கள் ஸ்லீப்பர் செல்களாக இருப்பதாக தினகரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகள்
புதன் ஒக்டோபர் 18, 2017

இந்திய சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிரச்சனை மிகுந்த பஸ்தார் பகுதிகளில் நடைபெறும் காவல்துறை மற்றும் பாதுகாப்பு குழுக்களின் மனித உரிமை மீறல்கள், அத்துமீறல்கள், பெண்கள் மீதான வன்முறை, மைனர்களை சிறையில